பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/746

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


போல விகாரப்படாது நின்று உலகத்தைக் கரணத்தாற் படையாது உள்ளத்தாற் படைத்து அவ்வாறே காவாது காத்து அழியாது அழித்தலால் கனவிற் கண்டவற்றை நனவுனர்வில் அறிபவன் அவற்றால் தொடக்குண்டு விகாரம் அடையாதவாறு போலத் தொடக்குண்ணாத விகாரமின்றி நிற்பன் என்பது இதன் பொருளாகும். நோக்குதல் - காத்தல், நொடித்தல் - அழித்தல், ஆக்குதல் படைத்தல். இவ்வுதாரணவெண்பா,

"நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை

நுணுக்காதே யாதொன்றும் நுணுகி னானை ஆக்காதே யாதொன்றும் ஆக்கி னானை

அணுகாதாரவர்தம்மையனுகா தானைத் தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்

திருப்புன்கூர் மேவிய சிவ லோகனை நீக்காத பேரொளிசேர் நீடு ரானை

நீதனேன் என்னேநான் நினையா வாறே” (6.11.15)

என வரும் திருத்தாண்டகத்தின் சொற்பொருளை அடியொற்றியமைந்துள்ளமை அறியத்தகுவதாகும். இதன்கண் நுணுகுதல்’ என்றது பருமையுருவினதாகிய பிரபஞ்சத்தை நுண்ணுருவில் ஒடுக்குதலாகிய அழித்தற் றொழிலைக் குறித்துநின்றது.

உருவும் அருவும் என்னும் அவ்விரு கூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றாகாமல் அவற்றிற்கு அப்பாற்பட்டு வேறாய் விளங்குவது பரம்பொருள் என்பதனைப் புலப்படுத்துவார், 'ஒன்றலா ஒன்று என் அதனைக் குறித்தார் மெய்கண்டார். அதனால் உலகினை இயக்கும் பரம்பொருள் முற்றுணர்வும் அளவிலாற்றலும் பேரருளும் சுதந்திரமும் முதலிய உயர்வற வுயர்ந்த குணங்களுடையன் என்பது பெறப்படும். படவே இத்தன்மையனாய முதற்கடவுள் ஒருவனேயமையுமாகலின் வேறும் அத்தன்மையர் உண்டெனக் கொள்வது மிகையென்னும் குற்றமாம். அன்றியும் பொருட்குக்கூறும் இலக்கணத்துள் ஒருவாற்றானும் வேற்றுமையில்லாதபோது அங்ங்னம் ஒரே தனமையதாகிய பொருள் ஒன்றாயிருத்தலன்றிப் பலவாக