பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/756

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

747


ஆணவம், கன்மம், மாயை என்னும் இம்மும் மலங்களின் இயல்பினையும் முறையே விளக்கும் நிலையில் அமைந்தது,

“விளையாததொர் பரிசில்வரு பசுபாச வேதனையொண்

தளையாயின. தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்”

(1-12-2)

என வரும் ஆளுடையபிள்ளையார் தேவாரமாகும். இதன்கண்,

1. விளையாததொர் பரிசில் வருபசு (வேதனை) 2. பாசவேதனை 3. ஒண்தளை

என மும்மலமும் முறையே குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் "விளையாததொர் பரிசில் வரு பசு வேதனை என்ற தொடர், புதிதாகத் தோன்றாததன்மையில் (அஃதாவது அநாதியே) உயிரைப் பற்றியுள்ள பசுத்துவம் எனப்படும் ஆணவ மலத்துன்பம் எனப்பொருள்படும். பாச வேதனை என்பது நல்வினை தீவினையாகிய இருவினைப் பிணிப்பால் உண்டாகிய துன்பம் ஈண்டுப் பாசம் என்றது கன்ம மலத்தையேயென்பது, வினையென்பாச மறைவிலே என வரும் நாவுக்கரசர் வாய்மொழியாலும் இருவினைப்பாசம்’ (பெரிய-நாவுக்) எனவரும் சேக்கிழார் வாய்மொழியாலும் நன்கு தெளியப்படும். ஒண்தளை என்பது உயிர்கட்குச் சிறிது அறிவு நிகழ்ச்சியை (ஒட்பத்தை) விளைப்பதாய் உயிரைத் தளைத்துள்ள மாயையைக் குறிக்கும். மாயாமலம் உயிர்கட்கு விழைவு அறிவு செயல்களை விளக்குந்தன்மையது என்பதனை அருனந்தி சிவாசாரியார் தாம் இயற்றிய சிவஞான சித்தியாரில் ஆணவமலம் எனத் தனியே ஒரு மலமில்லை அது மாயாகாரியமே என்பார் கூற்றை மறுத்துரைக்குமிடத்து,

“மலமெனவேறொன்றில்லை மாயாகாரியம் அது என்னின்,

இலகுயிர்க்கு இச்சாஞானக்கிரியைகள் எழுப்பும் மாயை, விலகிடும்மலம் இவற்றை வேறுமன்றதுவேறாகி உலகுடல் கரணமாகி உதித்திடும் உணர்ந்துகொள்ளே”