பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/759

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இறக்குங்கால் அடுத்தவினை காட்டும் கதிநிமித்தம் பற்றி உயிர் அவாவியபடி மனம் செலுத்துதலால் அக்கதிக்கண் செல்லுதற்கு ஏதுவாய் எஞ்சி நின்ற புண்ணிய பாவ எச்சத்தால் சூக்குமதேக அளவாய்ச் சென்று அம்மனம் தள்ளியகதிக்கு அமைந்த கருவின்கண் விழும்” என்பது இதன் பொருளாகும். உயிர்கட்குப் படைப்புக்காலந்தொட்டுச் சங்காரகாலம் அளவும் நிலைபெற்றுள்ளது சூக்கும வுடம்பாதலின் அதனை 'உள்ளது எனக்குறித்தார். என்றும் உள்ளதாகிய அந்நுண்ணுடம்பானது, பூதவுடம்பு பூதசார வுடம்பு, யாதனாவுடம்பு என்பவற்றுள் வேண்டியது ஒன்றனைத் தோற்று தன்மையது என்பார், உள்ளதே தோற்ற என்றார்.

இருவினைகளைச் செய்தற்குரிய பூதவுடம்பு மண்ணுலகத்திற்கும் நல்வினைப் ப்யனாகிய இன்பத்தினை நுகர்தற்குரிய பூத சாரவுடம்பு விண்ணுலகத்திற்கும் தீவினைப் பயனாகிய துன்பத்தினை நுகர்தற்குரிய யாதனாவுடம்பு நிரயத்திற்கும் உரியன என்பர். முன்னுடம்பு இறக்குங்காலத்து மனம் எங்குச் சென்று பற்றியதோ அங்கு வந்து மீளப்பிறக்கும் என்பார் மனம் தள்ளக் கருவில் விழும் என்றார். உள்ளதே தோற்ற என்றதனால் உடல் திரிவும் விண்படர்ந்து என்றதனால் இடத்திரிவும் கனவுணர்வின் மறந்து என்றதனால் அறிவுத்திரிவும் பெறப்பட்டன. வேதத்துட் கூறப்படும் பஞ்சாக்கினிவித்தையின் இயல்பு இங்கு உணர்த்தப்பட்டது என்றும், “ஆன்மாத் துலவுடம்பின் நீங்கிய வழித் துறக்கமும், மேகமண்டலமும் நிலனும் தந்தையும் தாயும் என்னும் ஐந்து நிலைக்களத்தும் வைகித்தோன்றுதலின், இவ்வைந்தின் இடமும் அங்கி யாகவும், இவற்றின் எய்திய ஆன்மா ஆவுதியாகவும் தியானிப்பதொரு சாதகமாதலின் இது பஞ்சாக்கினி வித்தையெனப்பட்டது” என்றும் கூறுவர் சிவஞானமுனிவர்.

எல்லாவுலகத்துக்கும் தலைமையாய் எப்பொரு ளையும் அமைத்து இயக்கும் ஆற்றல் வாய்ந்த முழுமுதற் கடவுள் ஒன்றுதான் இருக்க முடியும் என்று உணர்ந்து அப்பரம்பொருளைச் சிவனெனவே தெளிந்து வழிபட்ட