பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/792

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

783


கண்டீசர் தாமாம் பரிசளித்தார்.கண்டாயே சண்டீசர் தன்செயலாற்றான்” (19)

எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். இது,

. 'தீதில்லைமாணி சிவகருமஞ் சிதைத்தானைச்

சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்பஈசன் திருவருளாற்றேவர் தொழப் பாதகமே சோறு பற்றியவாதோண்ோக்கம்” (திருவாசகம்)

எனவரும் திருவாசகப் பாடலை அடியொற்றி யமைந்துள்ளமை ஒப்புநோக்கியுணரத் தகுவதாகும்.

தன்னியல்பால் ஒருவனாகிய இறைவன் உயிர்க்குயிராய்ப் பொருள்கள்தோறும் நீக்கமறக் கலந்து நின்று உலகுயிர்களை இயக்கியருளுதலால் உலகிற் பல்வேறு வடிவினவாகவும் திகழ்கின்றான் என்பதனை,

“ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க’ (சிவபுராணம்)

எனவருந்தொடரால் திருவாதவூரடிகள் அறிவுறுத்துவர். இத்தொடர்ப்பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

ÉÉ -

ஏகனுமாகிய நேகனுமானவன்

நாதனு மானானென்றுந்தீபற நம்மையே யாண்டானென்றுந்தீபற” (5)

எனவரும் திருவுந்தியாராகும்.

நிராதாரயோகத்தில் நிற்பார்க்கு நிகழும் திருவருள் அடையாளம் இதுவென உணர்த்துவது,

'திருச்சிலம்போசை ஒலிவழியே சென்று

நிருத்தனைக்கும்பிடென்றுந் தீபற நேர்பட அங்கே நின்றுந்தீபற” (17)

எனவரும் திருவுந்தியாராகும். “அனவரத தாண்டவம்

புரிந்தருளும் திருவடியில் உள்ள திருச்சிலம்பாகிய திருவருளினுடைய ஓசையொலி வழியே சென்று மீதானக்தே