பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/797

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கொள்கையினையும் அறவே வெறுத்து விலக்கியவர் என்பது,

“மிண்டிய மாயா வாதமென்னுஞ்

சண்ட மாருதஞ் சுழித்தடித்தாஅர்த்து உலாகாயதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிடம் எய்தி” (போற்றித் 54-57)

எனவரும் திருவாசகத் தொடராடல் இனிது விளங்கும்.

உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களாற் பிணிக்கப்பட்டுள்ளன என்னும் உண்மை,

"ஆணவ மாயையுங் கன்மமுமாமலம்

கானு முளைக்குத் தவிடுமி ஆன்மாவும் தானுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்றுநின்பாசம் பிரி த்தே' (2192)

எனத்திருமந்திரத்திற் கூறப்பட்டிருத்தலால் ஆன்மாக்கள் மும்மலங்களாற் பிணிக்கப்பட்டிருத்தலால் இலக்கணத்தாற் பிரமப்பொருளின் வேறாவன என்னும் கருத்து தேவார ஆசிரியர் காலத்திற்கு முன்பே சைவ நூல்களில் இடம் பெற்றுள்ளமை நன்கு புலனாகும். இம்மும்மலங்களைப் பற்றிய இயல்பு, தேவாரத் திருப்பதிகங்களிலும் இடம் பெற்றுள்ளமை முன்னர் விரித்துரைக்கப்பட்டது.

உயிர்களின் அறிவை விளங்கவொட்டாது தடை செய்து நிற்றல் ஆணவமாகிய இருள்மலத்தின் செயல். எல்லாவுயிர்களும் மாயையின் காரியமாகிய உடல் கருவி உலகு நுகர்பொருள் என்பவற்றைப் பெற்று அவற்றின் உதவியால் அறியாமை சிறிது சிறிதாக நீங்க அறிவு விளக்கம் பெறுவன. இவ்வாறு உயிர்களின் அறிவு விளங்குதற்குக் கருவியாய் நின்று பயன்தருதல் மாயையின் செயலாகும். உயிர்கள் மலம்மாயை என்னும் இரண்டின் அகமாய் நின்று வினைசெய்யுங்கால் நல்வினை தீவினை என்னும் இரு வினைகள் நிகழ்வன. இவ்வினைகளால் உண்டாகும் பழக்கத்தை உயிர்களின் அறிவிற் பதியும்படி செய்தல் கன்ம மலத்தின் செயலாகும்.