பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/798

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

789


ஆணவமலத்தால் அறியாமையும், மாயை கன்மங் களால் அவ்வறியாமை நீங்கி அறிவு விளங்கப் பெறுதலும் உயிர்கள்பால் இடையறாது நிகழ்வன. இவற்றுள் ஆணவ மலம் ஒன்றே செம்பிற்களிம்பு போன்று, உயிரோடு ஒற்றித்து அதன் விழைவு அறிவுசெயல் ஆகிய ஆற்றல்களை அநாதியே மறைத்து நிற்பது. மாயையும் கன்மமும் அம்மலநீக்கத்திற்கும் உயிர்களின் அறிவு விளக்கத்திற்கும் துணை செய்வனவாய் இடையேயொரு காலத்து வந்து சேர்ந்தனவாகும். மல நீக்கத்திற்குத் துணை செய்யும் இவையிரண்டும் ஆனவ மலத்தோடு உடன்நின்று அம்மலத்தின் சார்பினால் தாமும் ஒரோவொருகால் மயக்கத்தை விளைத்தல் பற்றி மலம் என்றி பெயரால் வழங்கப்படுவனவாயின. அறியாமையைச் செய்யும் மலத்தின் வன்மையை ஒடுக்கி உயிர்கட்கு அறிவினை விளங்கச் செய்தற்பொருட்டே எல்லாம் வல்ல இறைவன் பல வேறுடம்புகளையும், கருவிகளையும் அவை தங்குதற்குரிய பல்வேறு உலகங்களையும் அவை நுகர்தற்கேற்ற பல்வேறு நுகர்பொருள்களையும் மாயையென்னும் முதற்பொருளி னின்றும் படைத்து வழங்குகின்றான். இறைவனாற் படைத்தளிக்கப்படும் உடல், கருவி, உலக நுகர்பொருள்க ளாகிய இவை மாயை என்னும் முதற்பொருளின் காரியங்க ளாதலின் இவை மாயேயம் என வழங்கப்படும்.

இவ்வாறு இறைவன் உயிர்கட்கு உடல், கரணம், உலகு, நுகர்பொருள்களைப் படைத்து வழங்குதலின் நோக்கம், உயிர்கள் உலகநுகர்ச்சிகளால் நன்றுந்தீதும் கண்டு அறிவு விளங்கப்பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள பாசப் பிணிப்பினின்றும் விடுபட்டுப் பேரின் பவுருவினதாகிய சிவத்துடன் இரண்டறக்கலந்து தாமும் சிவமுமாய் நிலை பெயராப் பேரின்ப நிலையினைப் பெறுதற்பொருட்டேயாம்.

முதல்வன் திருவருளால் மாயை கன்மங்களின் உதவியினைப் பெற்றுச் சிறிது சிறிதாக அறியாமை தேய்ந்து, அம்முறையே அறிவு விளங்கப்பெற்ற உயிர்கள், தமக்குத் தோன்றாத் துணையாய் நின்று அருள்புரியும் உண்மை யறிவின் பவுருவினனாகிய சிவபரம்பொருைைள அடைந்து அம் முதல் வனது திருவடியில் இரண்டறக் கலந்து