பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/799

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

790

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஒன்றாதலிலேயே தமது நாட்டைத்தைச் செலுத்தி உலகியற்பொருள்களிலும் தம்மைச் சூழ்ந்துள்ள உற்றார் உறவினர் முதலியோரிடத்திலும் தம் உடம்பிலும் உயிராகிய தம்மிலும் செல்லும் உணர்வை மடித்துத் திருப்பித் தம் உயிருணர்வுக்கு உணர்வாய் விளங்கும் சிவபரம்பொருளிலே படியுமாறு செய்து, தாம் ஒருபொருள் உண்டென்பதனை மறந்து சிவமாகவே அமர்ந்திருப்பன என்பர் பெரியோர். இவ்வாறு உயிர்கள் மும்மலப் பிணிப்பினின்றும் நீங்கிச் செம்பொருளாகிய சிவத்தைத் தலைக்கூடிச் சிவமெனத் தாமென வேறின்றி இரண்டறக் கலத்தலையே திருவாத வூரடிகள் சிவமாதல் எனக் குறித்துள்ளார். ஆகவே மலம் மாயை என்னும் பாசங்களும், அவற்றோடு உடனாய் நிற்றல் பற்றிப் பசுவென வழங்கப்படும் உயிர்களும் இவை எல்லா வற்றையும் ஊடுருவி யாண்டும் நிறைந்து நின்றே ஒன்றினுந் தோய்வற விளங்கும் பதியாகிய சிவமும் என இம்மூன்றும் என்றும் உள் பொருள்களே யாமென்பதும், உயிர்கள் மலமாயை கன்மங்களின் பிணிப்பினின்றும் விடுபட்டுச் சிவத்தைத் தலைக்கூடுதல் என்பது, மும்மலங்களாற் கட்டுப்பட்டு அல்லற்படும் முன்னைய நிலையினின்றும் பெயர்ந்து என்றும் பேராவியற்கையாகிய பெருநிலையைப் பெற்றுப் பேரின் பவுருவாய் நிற்கும் அவ்வளவேயல்லது, அவ்வுயிர்கள் தம் பொருண்மைகெட்டு ஒன்றுமேயில்லாத வெறும் பாழாயொழிதல் அன்று என்பதும் சைவ சித்தாந்தத்தின் கொள்கைகளாகும்.

மணிவாசகப்பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருவாக சப்பனுவலில் சைவ சித்தாந்த நுண்பொருள்கள் ஆங்காங் கே தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன. ஆன்மாவின் அகத்தே அறிவை மறைத்து நிற்கும் ஆணவமலமும் புறத்தே அவ்வுயிர்களின் கட்புலனை மறைத்து நிற்கும் இருளும் ஆணவமலத்தின் இருவேறு திறங்களாதலின், அதனை 'இருள் எனவும், அஃது அறியாமையைச் செய்தலில் அஞ்ஞானம் எனவும், உயிர்களின் அறிவு செயல் முதலியை வெளிப்பட ஒட்டாது அவற்றைக் கயிறுபோல இறுகப் பிணித்து நிற்றலின் பு: சம்’ எனவும், உயிர்கட்குக் கலக்கத்தை விளைவித்தலின் மலம்' எனவும், அம்மலத்தில்