பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/813

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

804

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“தானும் அழிந்து தனமும் அழிந்துநீ

னுேம் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்தபின் நானும்அழிந்தமை நானறியேனே’ (திருமந்திரம் 2951)

எனவும்,

"இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்

பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள்ளாகி அருளாலழித்திடும் அத்தனடிக்கே உருளாத கன்மனம் உற்றுநின்றேனே" (திருமந்திரம் 2952)

எனவும் வரும் திருமந்திரப் பாடல்களில் திருமூலநாயனார் நன்கு விளக்கியுள்ளார்.

“பாசப் பிணிப்பினின்றும் நீங்கிய தூயஉயிர், இறைவ னுடன் இரண்டறக் கலந்த நிலையில் இதற்குமுன் அதன்கண் நிகழ்ந்த புறப்பொருளுணர்வும் தன்னைப் பற்றிய உணர்வும் முற்றிலும் மறைந்தொழிய இறைவனது மெய்யுணர்வு மட்டுமே மேற்பட்டு விளங்கத் தன்னுணர்வு அதனுள் அடங்கி உரை வரம் பிகந்த சிவஞானமாகிய பேரின்ப வெள்ளத்திற் படிந்து இன்புறும். இவ்வின்பநிலையில் உயிரானது தன்பொருட்டன்மையிற் சிறிதும் கெடாதிருக்கும் என்பதனை,

  1. 4

முத்திதனின் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்தவனு போகத்தைத் துய்த்தலணு -மெத்தவே இன்பங்கொடுத்தவிறை இத்தைவிளை வித்தல்மலம் அன்புடனே கண்டுகொளப்பா” (உண்மை 50)

எனவரும் உண்மை விளக்கப்பாடலில் திருவதிகை மனவாசகங் கடந்தார் தெளிய விளக்கியுள்ளமை அறியத்தகுவதாகும்.

உலகநுகர்ச்சியிற் பதிந்த உணர்வோடு உள்ள உயிர்க்குச் சிவம் விளங்காது, சிவபோகத்தில் திளைக்கும் உணர்வோடு உள்ளம் கூடிய உயிர்க்கு உலகம் தோன்றாது. இவ்வாறு கட்டு நிலையிலும் வீட்டு நிலையிலும்