பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/819

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

810

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என மணிவாசகப் பெருமான் உணர்ந்து போற்றிய குறிப்பு மேற்குறித்த விரையும் மலரும் போல் விம்மி என்ற தொடரில் இடம்பெற்றுள்ளமை காணலாம்.

பரணதேவநாயனார் பாடிய சிவபெருமான் திருவந்தாதியில், தத்துவத்தின் உட்பொருள் எனவும், 'பெண் ஆண் அலியென்று பேச்சுக்கடந்த பெருவெளி' எனவும், சொல்லாயம் இன்றித் துநெறிக்கட், சொல்லாய்ட் பரந்த சுடரொளி' எனவும், தாமேயவாறு சமய முதற் பொருளுந் தாமேயவாறு தழைக்கின்றார் எனவும், உருவு பல கொண்டொருவராய் நின்றார் - உருவு பலவாம் ஒருவர்' எனவும் வரும் தொடர்கள் முழுமுதற்பொருளாகிய இறை யியல்பினைத் தெளிவாக விளக்குவனவாகும்.

தமிழகத்துத் தோன்றி வழங்கும் தெய்வ வழிபாடுகள் எல்லாவற்றையும் தனக்கு அங்கமாகக் கொண்டு அவை யெல்லாவற்றோடும் தொடர்புடையதாய் மக்கள் அனைவர்க்கும் பொதுவாக விளங்குவது சிவ வழிபாடு என்பதனை,

"வேந்துக்கமாக்கடற் சூரன்முன்னாள்பட வென்றிதந்த சேந்தற்குத்தாதை, இவ்வையமளந்த தெய்வத்திகிரி ஏந்தற்கு மைத்துனத்தோழன் இன்றேன்மொழி வள்ளி

யென்னும் கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம்மால் விடைக்கொற்

றவனே’

எனவும்,

"கொற்றத்துப்பின் ஒற்றை யின்ற

துணங்கையஞ் செல்வத் தணங்கு தருமுதுகாட்டுப் பேய்முதிர் ஆயத்துப்பினவின்கொழுந”

எனவும் வரும் சிவபெருமான் திருமும்மணிக்கோவைப் பாடல்களில் இளம்பெருமானடிகள் விளக்கியுள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும்.

ஒலிக்குங் கடலிடத்தே நுரையும் அலையும்