பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/824

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

815


என வரும் திருவொற்றியூர் ஒருபாவொருபது பாடலில் திருவெண் காட்டடிகள் தெளிவாக விளக்கியுள்ளார். இதனால் சிவபெருமான து உண்மையிலக்கணம் புலப்படுத்தப்பெற்றுள்ளமை அறியத்தகுவதாகும்.

மெய்ப்பொருளை யுணரமுற்பட்டு அறிவினால் உயர முயலும் நான்முகன் முதலாக ஆணவ இருளில் அகப்பட்டுப் பல்வேறு உடம்பினைப் பெற்றுழலும் ஏனைய உயிர்கள் ஈறாகவுள்ள எல்லாவுயிர்களும் உருவம், உணர்வு, பெருமை, ஆற்றல், செல்வம், வன்மை, செய்யும் தொழில்வகை, ஆகியவற்றால் வேறுபட்டனவாகி, வினைத்தொடக்கி னின்றும் நீங்காது ஒன்றையொன்றொவ்வாதனவாய்க் கூடி நிற்பது இவ்வுலகத் தொகுதி. இதன்கண் வாழும் உயிர்களின் ஒழுகலாறுகள், நிலைபெற்ற பெருங்கடலுள் உயர்ந்து தோன்றும் அலைகளைப் போன்று இறைவனாகிய முழுமுதற் பொருளை ஆதாரமாகக் கொண்டு தோன்றி, அப் பொருளினது வியாபகத்திடையே வளர்ந்து விரிந்தும் ஒடுங்கியும் இடம்பெயர்ந்தும் கலந்தும் ஒன்றிலும் தோய்வின்றி விளங்கும் அம்முதல்வனது இயல்பினை விளக்கி நிற்பன. இங்ங்னம் இறைவனது வியாபகத்துள்ளே இவ்வுலகந் தோன்றி நின்றொடுங்கித் தொழிற்படும் இயல்பினை இறைவன து திருவருள் ஞானம் பெற்ற பெரியோர்கள் அறிவதல்லது திருவருள் பெறாத ஏனையோர் அறிதல் இயலாது என்னும் உண்மையினை விரித்துரைப்பது 'பொருளுணர்ந்தோங்கிய எனவரும் ஒருபாவொருபதின் ஐந்தாந்திருப்பாடலாகும்.

சிபெருமானது திருக்கோலத்தில் அமைந்துள்ள தத்துவவுண்மைகளைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது, திருவொற்றியூர் ஒருபாவொருபதில்,

く。

துமதி சடைமிசை வைத்தது துமதி ஆமதியானென அமைத்தவாறே அறனுருவாகிய ஆனேறேறுதல் இறைவன்யானென இயற்றுமாறே அது அவள் அவனென நின்றமை யார்க்கும் பொதுநிலை யானென வுணர்த்திய பொருளே