பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


யில்லாத உடம்பும் தம்முள் வேறுபட்ட இருவேறு பொருள்களே என்பதனை, காலம் உலகம் உயிரே உடம்பே' எனவும் 'உடம்பும் உயிரும் வாடியக்காலும்’ எனவும் எனவரும் தொடர்களால் தொல்காப்பியனார் தெளிவுபடுத்தி யுள்ளமை உயிரியல்பு பற்றிய ஆய்வுக்கு அரண் செய்வதாகும். எழுத்திலக்கண முனர்த்தக்கருதிய தொல்லாசிரியர்கள் உயிர்போல தானே இயங்குந்தன்மையது உயிரெழுத்து எனவும் மெய்போல் உயிராலன்றி இயக்கமில்லாத தன்மையது மெய்யெழுத்து எனவும் மெய்போல் உயிராலன்றி இயக்கமில்லாத தன்மையது மெய்யெழுத்து எனவும் எழுத்துக்களுக்குப் பெயர் கூறிய பெற்றியினை உற்று நோக்குங்கால் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்ட 5ழ் முன்னோரது மெய்யுணர்வின் திட்பமும் நுட்பமும் இனிது புலனாதல் காணலாம்.

உயிர், தான் நின்றவுடம்பினை விட்டுப் பிரிந்து செல்லும் இயல்பினதென்பதனைச் சென்ற வுயிரின் நின்ற யாக்கை என்னுத் தொடராலும், கால வரையறையுட்பட்ட உடம்பினின்றும் உயிரைப் பிரிப்பதொரு தெய்வ ஆற்றல் உண்டென்பதும் அதனை மாற்றும் ஆற்றல் உயிர்கட்கு இல்லையென்பதும் ஆகியவுண்மையினை மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை என்ற தொடராலும் இவ்வுலகிற் பலரும் மாய்ந்தொழியத் தான்மட்டும் மாயாதிருந்து யாக்கை நிலையாமையை விளக்கும் அடையாளமாக எஞ்சி நிற்பது ஈமப் புறங்காடுமட்டுமே யென்பதனை, மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் சொல்லாக் காடு வாழ்த்து’ என வரும் துறைப் பொருளாலும் தொல்காப்பியனார் தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறே மன்னாப் பொருட் பிணி என்பதனால் செல்வ நிலையாமையையும் 'இளமையதருமை என்பதனால் இளமை நிலையாமை யையும் தொல்காப்பியனார் அறிவுறுத்தியுள்ளமை உளங்கொளத் தகுவதாகும்.

இவ்வுலகம், இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை எனப் பல்லாற்றானும் நிலையாதென்பதனை நன்குனர்ந்தவர் இவ்வுலகியல்