பக்கம்:சொன்னார்கள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று.

—சார்லஸ் டார்வின்


எனக்கு என் அப்பாவின் பேரில் தனி ஈடுபாடுண்டு. அவரைப் பெரிதும் மதித்தேன். நான் பார்த்தவர் களெல்லோரிலும் அவர் மிகுந்த வலிமையும், ஊக்கமும் உடையவராகத் தோன்றினர். நானும் பெரியவனாக வளரும்போது அப்பாவைப் போலவே இருக்கவேண்டும் என்று எண்ணினேன். நான் எவ்வளவுக்கெவ்வளவு அவரை மதித்தேனோ, நேசித்தேனோ அவ்வளவுக்கவ்வளவு அவரைக் கண்டு அஞ்சினேன்.

—நேரு


சங்கீதத்தை எல்லோரும் ரசிக்க வேண்டுமென்பதே இயக்கத்தின் நோக்கமாதலால் இதுபற்றி விவாதங்கள் செய்வது கேவலமான காரியம். இயக்கத்தின் கருத்தைத் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் எவ்விதமான ஆட்சேபமும் இருப்பதற்கில்லை. நான் சிதம்பரம் மகாநாட்டுக்குப் போயிருந்தேன். அங்கு நிறைவேறிய தீர்மானம் மிதமான முறையிலேயே இருந்து. தமிழர்களால் தமிழ் நாட்டில் ஏற்பாடு செய்யப்படும் கச்சேரிகளில் பாட்டுகள் எல்லாமே தமிழில் இருக்க வேண்டுமென்று என் சொந்த ஹோதாவில் யோசனை சொல்கிறேன். அபிப்ராய பேதங்களை மறந்து ஒற்றுமையாக விருந்தால் எல்லாருக்கும் க்ஷேமம். அப்படிச் செய்வதன் மூலம் தேசிய வாழ்வு நலம்பெறச் சேவை செய்ததாக ஏற்படும்.

—கல்கி (25 - 10. 1941)

(தேவகோட்டை தமிழிசை மாநாட்டில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/102&oldid=1016048" இலிருந்து மீள்விக்கப்பட்டது