பக்கம்:சொன்னார்கள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106


நண்பர்களே! நான் சொல்ல விரும்பிய விஷயமெல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டேன். நமது மூதாதையர் மகத்தான காரியங்களைச் செய்திருக்கின்றார்கள். நாம் அவர்கள் செய்க காரியங்களை விட இன்னும் மேலான காரியங்களைச் செய்தல் வேண்டும். நீங்கள் வில்லிலிருந்து செல்லும் அம்புபோல் இருங்கள். பணையின் மேல் விழும் சம்மட்டிபோல் இருங்கள். தனக்கு இலக்காயுள்ள பொருளை பீறச் செய்கிற பட்டாக் கக்தியைப்போல் இருங்கள். குறி தப்பினால் அம்பு முணுமுணுப்பதில்லை. விழவேண்டிய இடத்தில் விழாவிட்டால் சம்மட்டி தன்னை வெறுத்துக் கொள்வதில்லை. பட்டாக்கத்தியானது அதனைச்சுழற்றுவோன் கையில் ஒடிந்துபோய் விட்டால் துக்கப்படுவதில்லை.இருந்தும் இவற்றைப் பயன்படுத்துவதனாலேயே ஒருவகை மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அவற்றை நீக்கி வைப்பதனாலும் அதே மகிழ்ச்சி உண்டாகின்றது.

—சிவானந்த சுவாமிகள் (1-4-1926)

(கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பேலூரில் நடைபெற்ற இராமகிருஷ்ண சங்கத்தின் முதல் மாநாட்டுத் தலைமையுரையில்.)

நான் சீட்டாடமாட்டேன். ஆனல் சீட்டாடுகிறவர்களை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். நண்பர்களுக்காக எதையும் கொடுக்கவிடத் தயாராக இருப்பவர்கள்கூட, சீட்டாட்டத்தில், நண்பர்கள் சிறு பிழை செய்தாலும் சகிக்கமாட்டார்கள்.

—சி. சுப்பிரமணியம் (18-9-1952)


ஜனநாயகத்தின் முழுப்பலனையும், மக்கள் அனுபவிக்கவேண்டுமானல், நீதியும், நிர்வாகமும் தமிழில் செயல்பட வேண்டும்.

டாக்டர் ப. நடராசன், எம். எல். ஏ. (8-3-1962)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/108&oldid=1016058" இலிருந்து மீள்விக்கப்பட்டது