பக்கம்:சொன்னார்கள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

அவரது கைங்கரியமாகிய நற்செயல்களைச் செய்து நமது வாழ்நாளைப் பயனுள்ளதாய்ச் செய்யும்படி முயலுவோமாக.

—மாக்ஸ் முல்லர் (27-9-1883)

[பிரிஸ்டல் நகரத்தில் நடைபெற்ற இராஜாராம் மோகன்ராய் 50-வது நினைவு விழாவில்]

கல்வி, நாகரிகம் முதலியவற்றால் செழிப்புற்றோங்கும் நாடுகளில், எவையெவை நன்மை என்று தோன்றுகின்றனவோ, அவைகளை இந்தியாவின் சீர்திருத்தத்தின் பொருட்டுப், பயன்படுத்தி இவ்விதமாய் இந்தியாவையும், இங்கிலாந்தையும் என்றும் மாறாத சங்கிலிகளினல் இணைப்பதன் பொருட்டுச் செய்யப்படும் ஒவ்வொரு சிறு முயற்சியும் , அரசினர் அளிக்கும் எல்லாப் பரிசுகளுக்கும் மேலானதென்றே நான் கருதுகிறேன். இப்படிப்பட்ட சிறந்த செயல்களைச் செய்வதில் பல்வேறு இடையூறுகளும் இன்னல்களும் நமக்குத் தோன்றும். இப்படிப்பட்ட தடைகள் இதில் மாத்திரமல்ல மனிதன் தன் வாழ்நாளைச் செலவிடக்கூடிய பற்பல காரியங்களிலும் இருக்கின்றன. ஆதலால், இவற்றைச் செய்து நிறைவேற்றுவதற்கு உதவி செய்யுமாறு, சென்னைக் கிறித்தவ கல்லூரிப் பழைய மாணவர்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.

—டாக்டர் வில்லியம் மில்லர் (30.4.1884)
[சென்னை மெமோரியல் மண்டபத்தில்]

காலையில் படுக்கையை விட்டெழுந்து பசியினல் பழைய சாதத்தை உண்டு எக்கா ஒன்று 14-அணா வீதமாக சத்தம் பேசி பிருந்தாவனத்துக்குப் புறப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு பிருந்தாவனத்தில் சேர்ந்து, ஸ்ரீ சேட்ஜீ அவர்களுடைய பெரிய கோயில் காரியஸ்தர் அப்பாசாரியவர்களைப் பார்க்க, அவர் வந்து அந்தக் கோயிலுக்குள்ளாகவே பெரிய மெத்தை வீட்டை நமக்குத் தயார் செய்து கொடுத்தார். உடனே கடை வீதிக்குப் போய் வேண்டிய சாமான்களை வாங்கி வந்து சமைத்துச் சாப்பிட்டு மாடி ஹாலில் படுத்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/11&oldid=1013126" இலிருந்து மீள்விக்கப்பட்டது