பக்கம்:சொன்னார்கள்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122


நண்பனே நான் இறந்துவிட்டால், எனக்காகத் துக்கப் பாடல்களைப் பாடவேண்டாம். என் கல்லறை மீது ரோஜா செடி வேண்டாம். நிழல்தரும் மரங்களையும் நடவேண்டாம். ஆனால் பச்சைப் புல்லைப் பயிரிடுங்கள். அதன் பசுமை தங்களுக்கு என்னை ஞாபகப்படுத்தட்டும்.

— கிறிஸ்டியா தாருஸ்லெட்டி


நான் இயற்கையின் வரப்பிரசாதம் பெற்றவன் என்று இங்கே பாராட்டினார்கள். அப்படி நான் எண்ணவில்லை. உங்களில் ஒருவனாகவே நானும் பிறந்தேன். நாம் சொற்களிலும், வண்ணங்களிலும், இசையிலும், கலாசாரத்திலும், போற்றிப் புகழுகிறோமே அந்த இயற்கை, என் கனவுகளில் இல்லை! நாம் வியந்து போற்றும் அவ்வியற்கை, தனது வெப்பத்தாலும், வெள்ளத்தாலும். பூகம்பத்தாலும் வியாதியாலும் நம்மை வதைக்கிறது. இயற்கையில் குடி கொண்டிருக்கும் நமது எதிரிகள் அனைத்தையும் எண்ணிப் பாருங்கள். அப்படியானால், நான் இயற்கையின் அருள் பெற்றவன் என்று கூறமாட்டிர்கள்! பார்லி பயிரில் கூட அழகிய புல்லுருவிகள் இருப்பதை மறந்து விடாதீர்கள்.

—மாக்ஸிம் கார்க்கி

(1928-ல் திமிலிஸி நகரில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில்)

என் மனம் உருக்குத் துண்டைப் போன்றது. அதில் எழுதுவது கடினம். ஆனால் எழுதி விட்டால், என்றுமே அழிக்க முடியாது.

—ஆபிரகாம் லிங்கன்

(முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி)


அரசியல் பாரம்பரியம் இருந்துதான் தீரவேண்டும் என்பதில்லை. ஒரு வகைக்கு அது இல்லாமல் இருப்பதுதான் நல்லது.

—ஈ. வி. கே. சம்பத் (1-9-1974)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/124&oldid=1016089" இலிருந்து மீள்விக்கப்பட்டது