பக்கம்:சொன்னார்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

ஆள்கின்றது. செடியிலிருக்கும் மலர் காம்புடன் கூடியிருக்கும் வரையில் சோபிக்கும். அது நிலத்தில் விழுந்தபிறகு வாடி உலர்ந்து போகும். அப்படியே நானும் காலம் கழித்து வருகின்றேன்.

மெளரிய சக்கரவர்த்தி அசோகன் (கி. மு)

தற்காலத்தில் தமிழ் அபிவிருத்திக்காக அதிகமாய் உழைத்து வருபவர்கள் யாழ்ப்பாணிகளான கனம்' தாமோதரம் பிள்ளை, கனம். ஜே. வேலுபிள்ளை, பெரிய பட்டம் பெற்ற கனம். அரங்கநாத முதலியாரவர்களே. இவருள் கனம். தாமோதரம் பிள்ளை ஏட்டுப் பிரதிகளாய் 'மங்கி மறைந்து கிடந்த தமிழ் இலக்கண இலக்கியங்களில் அநேகத்தைக் கண்ணும் திருஷ்டி குறையத் தக்கதாக வெகு கஷ்டத்துடன் வாசித்துத் திருத்திப் பேர்த்தெழுதி, மிகுந்த பொருட்செலவும் செய்து, அச்சியற்றித் தமிழ்ப் பாஷையின் சிறப்புப் பிறருக்கு விளங்க மிகக் கருத்தோடு உழைத்து வருகிறார்.

—பேராசிரியர் டேவிட் ஜோசப். பி. ஏ., (1897)

நாம் நம்முடைய செளகரியத்திற்காகவே இந்தியாவை ஆளுகின்றோமே யல்லாது இந்தியர்களின் செளகரியத்திற்காக வல்ல. இராஜ்ய பரிபாலனத்தில் ஒன்றும் செலவழிக்காமல் சகலவற்றையும் சுரண்டுவதனால், நாம் கடவுள் முன்னிலையில் அபராதஞ் செய்தவர்களாகின்றோம். இந்தியாவின் பொருளாதார விஷயமாக ஆராய்ச்சிசெய்தால் இந்தியா இங்கிலாந்துக்குக் கப்பம் கட்டிவருவதே நம் ஆளுகையின் பெரிய குற்றமாகும்.

பம்பாய் கவர்னர்–சர் ஜான் மால்கம்
(1827-ல் பாராளுமன்றத்தில் பேசியது)

பெண் வைத்தியர்களைக் குறித்து ஒரு வார்த்தை கூறுகிறேன். இந்தியாவெங்கும் ஆண் வைத்தியர் இருந்த போதிலும் பெண் வைத்தியர் மிகக் குறைவு. இத்தேசத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/13&oldid=1013128" இலிருந்து மீள்விக்கப்பட்டது