பக்கம்:சொன்னார்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

அதிகாரிகள் என்னை வெளி உலகத்தொடர்பின்றி தனியே வைத்திருந்தார்கள். ஆனால் நான் மக்களை மறக்கவில்லை. மக்களும் என்னை மறக்கவில்லை. ஆறு வருடகாலம் நான் மக்களைப் பிரிந்திருந்தாலும் அவர்களிடத்தே உண்டான அன்பு எனக்கு எள்ளளவும் மாறாது. ஆறு வருடகாலத்திற்கு முன் அன்னோன்னியத்துடனும் உணர்ச்சியுடனும் எங்ஙனம் எந்த அந்தஸ்துடன் நான் உழைத்து வந்தேனோ அவ்வண்ணமே மீண்டும் உழைக்க நான் சித்தமாயிருக்கிறேன். ஆனால், காலத்தையறிந்து, என் வழியைச்சற்று மாற்றிக் கொள்ள வேண்டியதாக மட்டும் ஏற்படும்.

பாலகங்காதர திலகர் (21 - 6 – 1914)


இம்மாதிரி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைப்பது உங்களுக்கும், எனக்கும் அருமைதான். நாம் இதுபோன்ற கூட்டங்களைக் கூட்டுவதன் நோக்கமென்னவெனின், ஒவ்வொரு நிமிடமும் முன்னேறுவதற்காகவே துருக்கியில் கமால் பாட்சாவினால் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்தம் அளவிடற்கரியதாகும். அங்கு மூன்று பெண் நீதிபதிகள் இருக்கின்றார்கள். அங்கோரா போன்ற இடங்களிலுள்ள கோர்ட்டுகளில் ஏராளமான உத்தியோகங்களை வகித்து வருகிறார்கள். துருக்கிஸ்தானம் பெரியஸ்தானம் என்றால் காரணமென்ன? அங்கு 800 பெண்கள் நீதிபதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். முக்காடுபோடும் சமூகம் இவ்வளவு சீர்திருத்தம் அடைந்த பிறகுங்கூட நம்நாடு வாளாவிருப்பது மிகுந்த வெட்ககரமானதாகும்.

பட்டுக்கோட்டை K. V. அழகிரிசாமி
(6-7-1931–ல் விருது நகரில் க்ஷத்திரிய பெண் பாடசாலை ஆண்டுவிழாக் கூட்டத்தில்)

பெண் பிறவி 'பாவமான பிறவி என்று கூறும் இந்நாட்டில் மேடை மீதிருந்து பேசும் பாக்கியம் கிடைத்ததற்கு முதலில் நன்றி செலுத்த வேண்டுவது அவசியமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/17&oldid=1056820" இலிருந்து மீள்விக்கப்பட்டது