பக்கம்:சொன்னார்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


எனக்கென்று சொந்தமாக இப்பொழுது எதுவுமில்லை. ஒரு வீடு இருந்தது. அதையும் இப்பொழுது கொடுத்து விட்டேன்.

— பிரதமர் இந்திரா காந்தி

'நான் என்னை அழகி’ என்று நினைத்ததே இல்லை. என் மூக்கு ரொம்ப நீளம். ஒரு பல் உடைந்திருக்கிறது. என்உயரம் குறைவு. பருமனாகிக் கொண்டு வருகிறேன்.

— நடிகை சர்மிளா டாகூர்

சிவாஜி ஒரு சமயத்தில் ஒரு முகம்மதிய அரசரைத் தோற் கடித்தபோது, ஒரு இளம்பெண் கைதியாகப் பிடித்துக் கொண்டு வரப்பட்டாள். அப்போது அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி சிவாஜியிடம் கூறினர். அவரோ அவ்விதம் செய்வது ஒரு வீரனுக்கு அழகல்ல, ஆகவே, அவளை அவளது பெற்றேரிடம் கொண்டுபோய் ஒப்புவித்து விடுங்கள் என்றாராம். அவர் பிற பெண்களைத் தம் தாயைப்போல் பாவித்தவர். இந்த உத்தம எண்ணம் நம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும்.

—சர். ஏ. ராமசாமி முதலியார் (3-5-1927)
(சென்னையில், சிவாஜி 300-வது வருடக் கொண்டாட்ட விழாவில்)

ஒவ்வொருவரிடமும் மறைந்துள்ள திறமைகளையும், பண்புகளையும் வெளிக்கொணர்வதே கல்வியின் உயரிய லட்சியமாகும். கல்வி ஒருவருக்கு மறுபிறவி தருகிறது என்று இதனாலேயே இந்திய ஞானிகள் கூறியுள்ளனர். நாம் மறு பிறவி எடுத்தாக வேண்டும். இந்த மறுபிறவி எடுக்கவும், கிடைக்கும் திறமைகளை வெளிக்கொணரவும் ஒருவர் தன்னைப் பற்றியறிந்து கொள்ளவும் தற்சோதனை செய்து கொள்ளவும் வேண்டியது அவசியமாகும்.

—பிரமானந்த ரெட்டி (3-12-1976
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/25&oldid=1012812" இலிருந்து மீள்விக்கப்பட்டது