பக்கம்:சொன்னார்கள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


நம் நாட்டில் உழவுத் தொழிலும் நெசவுத் தொழிலும் மிகப் பெரிய தொழில்களாகும். உழவுத் தொழில் உயிர் பிரச்சனை. நெசவுத் தொழில் மானப் பிரச்னை. உண்ணுவதை உனக்காக உண்ணு; உடுத்துவதைப் பிறருக்காக உடுத்து என்கிறார்கள். உண்மையிலேயே நாம் பிறருக்காகத்தான் உடுத்துகிறோம்.

— இரா. நெடுஞ்செழியன்
(கல்வி, தொழிலமைச்சர்)

25 வயதுக்கு முன்பு யாரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. 40 வயதுக்குப் பிறகு யாரும் திருமண இன்பம் அனுபவிக்கக்கூடாது. 40 வயதுக்கு மேற்பட்டவர் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

—வினோபா (3-7-1974)

நான் கொள்கையில் மிகவும் நிலைபெற்றிருப்பவள். என் சொந்தக் காலில், சொந்தத் தத்துவத்தில் வலிமையுடன் நான் நிற்பேன். இதைவிட்டு நான் என்றுமே பிறர் தயவை நாடி, அடுத்தவர் காலில் நிற்பவள் அல்ல. குறிப்பாக எந்த மகானும், எந்தக் கடவுளும் எனக்குக் கை கொடுத்து உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாரையும் மகானாக எண்ணி குருவாக ஏற்று அவர் காட்டும் வழியில் போய் மோட்சம் அடைய வேண்டும் என்பது என் விருப்பம் அன்று.

—பிரதமர் இந்திரா காந்தி

சிலர் ஐந்தாறு வேஷ்டி புடவைகளை வாங்கி, பீரோ நிறைய அடுக்கி வைத்துக் கொண்டு, யாராவது விருந்தினர்கள் வந்தால் திறந்து காட்டுவார்கள். அவ்வளவுதானே தவிர வேறு பிரயோசனமில்லை; பணம் முடங்கி வீணாகப் போகாமல் வெளியே வந்து நாட்டின் செல்வத்தை மேலும் வளர்க்க வேண்டும்.

—காமராசர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/30&oldid=1013137" இலிருந்து மீள்விக்கப்பட்டது