பக்கம்:சொன்னார்கள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


தன் குழந்தைகள் மீது அக்கறை உள்ள யாரும் அவர்களை அரசியலில் விடமாட்டார்கள். அதனால் தான் என் மகன்களை நான் அரசியலில் நெருங்க விடவில்லை.

—பிரதமர் இந்திரா காந்தி

தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துக் கொண்டே இருக்கிறான்-சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.

—விவேகானந்தர்

அத்தந்த இனத்தவர்களை அந்தந்த இனத்தவர்கள் பாராட்ட வேண்டும். நடிகரை நடிகர் பாராட்ட வேண்டும். இசையமைப்பாளரை இசையமைப்பாளர் பாராட்ட வேண்டும். அதுதான் முறை.

— சிவாஜி கணேசன்

மற்ற மாகாணங்களைப் பார்க்கிலும் வங்காளப் பெண் மக்களின் நிலைமை மிகவும் தாழ்மையாகவே இருக்கின்றது. கல்கத்தாவில் ஒரு பெண் நீதிபதியாவது, கெளரவ மாஜிஸ்திரேட்டாவது கிடையாது.சிறுவர்சிறுமியர் நீதிமன்றத்திற்கு, அவசியம் பெண்களையே மாஜிஸ்திரேட்டுகளாக நியமித்தல் வேண்டும். படுதா பெண்கள், தாராளமாய்ப் பாங்கிகளில் பொருள் போட்டு, வரவு செலவு செய்யப் பெண்மக்கட்காக பிரத்தியேகமாக ஒரு பாங்கி இருத்தல் வேண்டும்.

—செல்வி கார்னீலியா சொராப்ஜி (11-7-1929)

(கல்கத்தாவில்)

பெரியவர்கள் எல்லாம் எழுதியிருக்கிறார்கள். அவற்றையே வாங்கிப் படிக்க மாட்டேன் என்கிறார்கள். எனக்கு என்னமோ புத்தகம் போட வேண்டும் என்றே தோன்றவில்லை ஆசைக்காகத்தான் கவிதை எழுதுகிறேன்.

—திருமதி செளந்தரா கைலாசம் (27.1.1912)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/41&oldid=1013149" இலிருந்து மீள்விக்கப்பட்டது