பக்கம்:சொன்னார்கள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97


குடும்பக் கட்டுப்பாடு மிக முக்கியமானதொரு விஷயம்; பாரதத்தின் தற்போதைய நிலைமைக்கும், தனிப்பட்ட குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் இது ஒரு அத்தியாவசியமான சமுதாயக் கடமை. நம்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டத்திற்கும், மக்கட் பெருக்கத்திற்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.

—ஜவாஹர்லால் நேரு

நான் பொருளாதார நிபுணர் அல்ல. அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் பொருளாதார நிபுணர்கள் அல்ல என்பதே என் கருத்து.

—பிரதமர் இந்திராகாந்தி (4-9-1973)

அறிஞர் அண்ணாவுடன் தேர்தல் பிரச்சாரத்துக்காக காரில் பாண்டிச்சேரி நோக்கி போய்க் கொண்டிருந்தேன். வழியில் ஒரு டீ கடை முன் காரை நிறுத்தி, சில பலகாரங்களை பொட்டலமாகக் கட்டி வாங்கிக் கொண்டு போனோம். அப்படி பொட்டலமாக மடிக்கப்பட்ட காகிதத்தில் “கல்லைத் தான் மண்ணைத்தான் கரைத்துத்தான் குடிக்கத்தான் கற்பித்தானா’ என்ற பாட்டு இருந்தது. இதில் ’தான்’ என்ற சொல் தேவையில்லாமல் அழகுக்காக பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டேன். பிறகு பாவமன்னிப்பு படத்துக்கு பாட்டு எழுதும்போது எனக்கு இந்த ‘தான்’ நினைவுக்கு வந்தது. அத்தான் என் அத்தான் என்னைத்தான்’ என்ற பாட்டை எழுதினேன்.

—கவிஞர் கண்ணதாசன் (22-11-1962)


மனிதன் வளர வளர குனிய வேண்டும் என்பதுபோல், பாராட்டுக்களை எச்சரிக்கைகளாகக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பாராட்டை எச்சரிக்கையாகவே கருதுகிறேன்.

7

—சிவாஜி கணேசன் (30.4-1960)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/99&oldid=1016041" இலிருந்து மீள்விக்கப்பட்டது