பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சங்கப் பலகை

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. மேற்கு வங்காளத்தின் முதல் கவர்னராக ராஜாஜி அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் நானும் கல்கத்தா சென்றோம்.

கல்கத்தாவில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். அதில் ஒரு நிகழ்ச்சியில் கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படத்தைத் திறந்து வைத்து பேசும்படி என்னைப் பணித்தார்கள். நானும் மிக்க மகிழ்ச்சியுடன் கல்கியின் திரு. உருவப்படத்தைத் திறந்து வைத்து விட்டுப் பேசலானேன்.

“தமிழ்நாட்டில் மதுரை மாநகர் மிகவும் பிரசித்திபெற்றது. அறுபத்து நான்கு திருவிளையாடல்கள், பாண்டிய மன்னர்களின் ஆட்சித் திறமை, தமிழ் வளர்த்த சங்கம்-இவைதான் அதற்குக் காரணமாகும்.

இதெல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் நாகரீகத்தையே உலகிற்கு எடுத்துக் காட்டுவது போன்ற விண் மறைக்கும் கோபுரமாகவும், வினை மறக்கும் கோயிலாகவும், கண்ணமைந்த காட்சியாகவும் மீனாட்சி அம்மன் ஆலயம் மதுரை மாநகரத்தின் நிரந்தரமான சிறப்புக்குச் சிகரம் வைத்தது போல அமைந்திருக்கிறது.

தற்போது மதுரை அரசியல் துறைகளிலும் பிரசித்த மடைந்திருக்கிறது. தேசீய இயக்கத்தில் மதுரை எப்போதும்