பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

சொன்னால் நம்பமாட்டீர்கள்

105



ஒரு சிலர் பொற்றாமரைக் குளத்தில் படகேறிச் சென்று சங்கப் பலகையில் தொத்திக்கொள்ள முயன்றார்கள். சிலர் கட்டு மரம் கட்டிக் கொண்டு போய்ப் பலகையைத் துண்டு துண்டாக வெட்டிவிடவேண்டுமென்று கோடாலியுடன் புறப்பட்டார்கள்.

சிலர் ஜலத்துக்குள் கண் மறைவாக நீந்திப்போய் முக்குளித்துப் பலகையில் ஏறிவிடப் பிரயத்தனப்பட்டனர். ஒன்றும் பலிக்கவில்லை. ஏமாற்றத்துக்குள்ளான பண்டிதர்கள் பலர் ஆத்திரமடைந்து, பலகையைப் பொசுக்கிவிட நெருப்புப் பந்தத்துடன் கிளம்பினார்கள். நெருப்புதான் அணைந்ததே ஒழியப் பலகையைப் பொசுக்க முடியவில்லை.

கடைசியாக, “இது தெய்வீக சக்தி வாய்ந்தது. தமிழ் ஆங்களின் தரத்தையும் தகுதியையும் அறிந்து கொள்ளத் தமிழ்க் கடவுளால் அளிக்கப்பட்ட தராசு, இதில் ஏறுவதற்கு நம்மை நாம் தகுதியாக்கிக் கொள்ள வேண்டுமே ஒழியப் பலகை மீது கோபப்படுவதில் பயனொன்றுமில்லை” என்று கண்டு கொண்டார்கள்.

இப்படி மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்த மேற்படி சங்கப்பலகை திடீரென்று ஒரு நாள் காணாமற்போய்விட்டது. சங்கப் பலகை எப்படி மறைந்தது எங்கே போயிற்று என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அனைவரும் கையை நெரித்துக் கொண்டார்கள். செம்படவர்களை வரவழைத்துப் பொற்றாமரைக் குளத்தில் வலைபோட்டுப் பார்த்தார்கள். ஊஹூம் சங்கப் பலகை

சில ஆண்டுகளுக்கு முன் ‘கர்நாடகம்’ என்ற பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலைகளைப் பற்றி விமர்சனம்