பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

121


செய்ய ஆரம்பித்தார்கள். நாடகம், சங்கீதம், நாட்டியம் சம்பந்தமாக அவர் எழுதிய விமரிசனங்களைப் படிக்கப் படிக்கத் தமிழ் மக்களுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது.

“இப்படியும் தராதரம் அறிந்து எழுத முடியுமா?” என்று அதிசயித்து மூக்கின் மேல் விரல் வைத்தார்கள் தமிழ் நாட்டில் காணாமற்போன சங்கப் பலகைதான் இப்படி மனித உருவத்தில் ‘கர்நாடகம்’ (கல்கி) என்ற பெயரில் தோன்றித் தமிழர்களுக்குத் தராசாக இருக்கிறதோ என்றுகூடச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய சந்தேகம் நாளடைவில் ஊர்ஜிதமாயிற்று.

“தமிழ்க்கடவுள் ‘சங்கப் பலகை'க்கு வேறு எந்த தேசமும் லாயக்கில்லை. அது தங்குவதற்குரியஇடம் தமிழ்நாடுதான்” என்று முடிவு கட்டியிருக்க வேண்டும். எனவே, மேற்படி பலகைக்கு மனித ரூபமளித்து கல்கியை ‘கர்நாடகம்’ என்ற பெயருடனே தமிழ் மக்களின் இதயத்திலே மிதக்க விட்டிருக்கிறார்கள்.

அன்று முதல் கல்கி ஏற்றுக்கொண்ட கலைஞர்தான் உண்மையான கலைஞர் என்ற மனப்பான்மை தமிழ் மக்களுக்கு உண்டாகியிருக்கிறது.

ஆம், தெளிந்த நீரோட்டத்தைத் தெளிந்த நீரோட்ட மென்றும் பாசி பிடித்த குட்டையைப் பாசி பிடித்த குட்டை என்றும் கர்நாடகம் (கல்கி) எப்போதும் சொல்லத் தயங்கியதேகிடையாது. தம்முடைய ஊரில் ஓடும் சாக்கடையாயிற்றே என்பதற்காக அவர் அதற்கு விஷேச சலுகைகாட்டி அதைப் புண்ணிய தீர்த்தம் என்றும் கூறுவது கிடையாது. கல்கியின் பாரபட்சமற்ற கலை விமரிசனங்களுக்குத் தகுந்த உதாரணங்களும் உண்டு.

ஒரு சமயம் காங்கிரஸ்வாதியும் கதர் அபிமானியுமான ஒரு பெண்மணியின் திரைப்பட நடிப்பு சுகமில்லை என்று கல்கி