பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிவாஜி தந்த கைக்குட்டை

ம்பாயில் பாரதிவிழா நடைபெற்றது. விழாவிற்கு நடிகர் திலகம் சிவாஜி அவர்களையும் என்னையும் அழைத்திருந்தனர். சிவாஜி வருகிறார் என்றால் கூட்டத்திற்குக் கேட்கவாவேண்டும்.

சிவாஜி பேசும்போது அவர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து கல்வி கற்றதில்லை என்றும் அந்தப் பாக்யம் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்.

நான் பேசும்போது வேடிக்கையாக “நான் பள்ளியில் படிக்கும்போது...” என்று சொல்லி நிறுத்திவிட்டு சிவாஜியைப் பார்த்து, “நான் பள்ளியில் படித்தவன்” என்று சொல்லிவிட்டு மேலே பேசினேன்.

கடைசியாக சிவாஜி பேசும்போதும், “சிலர் செய்த காரியங்களை அவர்கள் சொன்னால்தான் நமக்குத் தெரிகிறது. உதாரணமாக என் நண்பர் சின்ன அண்ணாமலை என்னுடன் பல ஆண்டுகாலம் பழகி வருகிறார்.

இதுவரையில் அவர் பள்ளியில் படித்தவர் என்பது எனக்குத் தெரியவில்லை. மொத்தத்தில் படித்தவரா என்பதும் நான் அறிந்து கொள்ள முடியவில்லை.

இன்று அவரே பள்ளியில் படித்ததாகச் சொன்னதும்தான், ‘ஒகோ இவர் படித்தவரா’ என்று எண்ணிக்கொண்டேன்,” என்றாரேபார்க்கலாம். சபையில் கரகோஷம் வானைப் பிளந்தது.