பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

167



இதைவிட இன்னும் அசிங்கமான விஷயங்கள் இப்பத்திரிகை முழுவதும் இருக்கின்றன. இப்பத்திரிகை நிறைய விற்பனை ஆகிறது என்பதைத் தெரிந்து கொண்ட சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இம்மாதிரி பத்திரிகைகள் நிறைய வெளியிடுகிறார்கள்” என்று சொன்னேன்.

‘ஓ’ “Yellow Magazine’ (மஞ்சள் பத்திரிகை) என்று சொல்லிவிட்டு அப்பத்திரிகைகள் அனைத்தையும் வேறு பக்கம் தூக்கி போட்டுவிட்டார். நானும் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

“போலீஸ் கமிஷனர் பார்த்தசாரதி ஐயங்கார் டெலிபோனில் பேசினார்கள். தங்களைப் போனில் பேசச் சொன்னார்கள்” என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னார்கள். போலீஸ் கமிஷனருக்கு போன் செய்தேன்.

“இன்று ராஜாஜியிடம் என்ன ரிப்போர்ட் செய்தாய்?” என்று கேட்டார். “மஞ்சள் பத்திரிகைப் பற்றி சொல்லியிருக்கிறேன்” என்று கூறினேன். “சரி மாலையில் சந்திப்போம் “என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

மாலையில் அவரைச் சந்தித்தபோது முதலமைச்சர் ராஜாஜி அவரை நேரில் வரச் சொல்லி சொன்னாராம். அதன்படிபோலீஸ் கமிஷனர் முதலமைச்சர் முன் ஆஜரானார். நான் கொண்டு போய் கொடுத்த பத்திரிகைகள் அனைத்தையும் முதலமைச்சர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்து இந்தப் பத்திரிகைகள் இனிமேல் கடைகளில் விற்கவும் கூடாது. அச்சகத்தில் அச்சாகவும் கூடாது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனே எடுக்கும்படி உத்தரவிட்டாராம்.

போலீஸ் கமிஷனர் சிறிது தயக்கத்துடன் எந்தச்சட்டத்தை வைத்து பத்திரிகையைத் தடுத்து நிறுத்த இயலும் என்று