பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

215



“சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்” என்று சொல்லிப் பேச்சை வேறு திசைக்குக் கொண்டு சென்று விட்டார்.

அப்போது எம்.ஜி.ஆர். ‘பாகவதர் கிராப்’ தான் வைத்திருப்பார். எம்.ஜி.ஆருக்கு ஒரு பலகீன மனப்பான்மை இருக்கிறது என்று நான் யூகித்தேன். அதாவது தனக்கு சமூகக் கதைக்கு ஏற்ற முகம் இல்லை. தற்கால கிராப் வைத்தால் பார்க்க நன்றாக இராது. கத்திச் சண்டை முதலியவைகள் சமூகக்கதையில் போட முடியாது. அம்மாதிரி சண்டை இல்லை என்றால் படம் ஓடாது,” என்று எண்ணிக்கொண்டுதான் சமூகக் கதையில் நடிக்க முயற்சிக்கவில்லை என்று நான் எண்ணினேன்.

பின்னர் ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், “நான் ஒரு சமூகக் கதை எடுக்கலாம் என்றிருக்கிறேன். தாங்கள்தான் அதில் நடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன்.

திரு. எம்.ஜி.ஆர். சிறிதுநேரம் யோசித்து, “சரி தாங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை, நல்ல கதையாகப் பாருங்கள்” என்று சொன்னார்.

நான் முன்னமே இந்திப் படமான ‘பாக்கெட்மார்’ என்னும் கதையைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். ஆகவே அப்படத்தைப் போட்டு எம்.ஜி.ஆருக்குக் காண்பித்தேன்.

அவருக்கு அந்தக்கதை மிகவும் பிடித்திருந்தது."சரி இந்தக் கதையையே எடுக்கலாம். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொன்னார்.

மறுநாள் சியாமளா ஸ்டுடியோ மேக்அப் அறையில் எம்.ஜி.ஆர். மேக்அப் போட்டுக் கொண்டிருக்கும் போது நானும் எனது கூட்டாளியான வி. அருணாசலம் செட்டியார் அவர்களும் சென்று, “சாவித்திரி பிக்சர்ஸ்” என்ற பெயரில் ஒரு கம்பெனி