பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பிற்கு அளவுண்டோ?

சக்கரவர்த்தி திரு. ராஜகோபாலசாரியார் அவர்களிடம் எனக்குச் சிறு வயது முதற்கொண்டு அதிகப்படியான ஈடுபாடு உண்டு. காரணம் சிறுவயதிலேயே கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியவைகளைப் படித்து, அதை மனதில் பதிய வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.

கல்கி அவர்கள் அடிக்கடி ராஜாஜி அவர்களைப் பற்றி எழுதும் கட்டுரைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்து அரசியலில் ராஜாஜியைப் பின்பற்றுபவனாக என்னை அறியாமலேயே நான் மாறிவிட்டேன்.

ராஜாஜியிடம் ஒரு தெய்வீகப் பக்தியை கல்கி அவர்களின் எழுத்து எனக்கு ஊட்டியது. நான் சென்னைக்கு வந்து குடியேறியபோது ராஜாஜி அவர்களின் அன்பை நம்பியே வந்தேன்.

ராஜாஜி அவர்களும் என்னிடம் மிகுந்த பிரியம் காட்டி என்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருந்து வந்தார்கள். சென்னையில் தியாகராய நகர் பனகல் பார்க் எதிரில் தமிழ்ப் பண்ணை என்ற புத்தக வெளியீட்டுப் பதிப்பக நிலையம் துவக்கியபோது ராஜாஜி அவர்களின் ஆசியுடன் துவக்கினேன்.

அப்போது அரசியலில் குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் ஒரு சிக்கலான நிலைமை உருவாகி இருந்தது. காங்கிரஸ்