பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

சொன்னால் நம்பமாட்டீர்கள்



“சம்பந்தம் இருக்கிறது. ஆண்டுதோறும் தீபாவளி அன்று தருமம்செய்வாரே அந்தப் புண்ணியவான் தருமப் பிரபு சோமசுந்தரம் செட்டியார், அவருடையதங்கை மகனடா இவர்” என்று இரண்டாவது குரல் பாசத்துடன் கூறியது.

“அப்படியா சோமசுந்தரம் செட்டியார் தங்கை மகனா” என்று முதல் குரல் பணிவாகச் சொல்லியது.

“ஆம் ஜாக்கிரதையாக மரியாதையாகப் பேசு” என்றது இரண்டாவது குரல்.

இந்த இருவரின் சம்பாஷணை என் காதில் தெளிவாக விழுந்தது.

என்னை அதட்டி மிரட்டிய கான்ஸ்டெபிள் பெயர் நாகலிங்கம் என்றும், என் தாய்மாமன் தருமத்தை எடுத்துச் சொல்லி நாகலிங்கத்தை அடக்கிய கான்ஸ்டெபிள் பெயர் ஆறுமுகம் என்றும் தெரிந்து கொண்டேன்.

அன்றைய சூழ்நிலையில் 1942-ல் ஆகஸ்ட் போராட்டம் நடந்துகொண்டிருந்தபடியால் போலீஸ்காரர்கள் கான்ஸ்டெபிள் வீடுகளுக்குச் செல்லாமல் இரவில் போலீஸ் ஸ்டேஷனில் படுத்துக் கொண்டு இருந்தார்கள்.

காலை மணி 6 அடித்தது. சிறைக் கதவைத் திறக்கும் காவலாளி சாவிக்கொத்துகள் குலுங்க வந்துகொண்டு இருந்தான். அவன் பின்னால் 10, 15 போலீஸ்காரர்கள் கூடவே வந்தார்கள். முதல் நாள் அந்தி நேரத்தில் என்னை அடிப்பதாக மிரட்டிய மேற்படி நாகலிங்கமும் வந்து கொண்டு இருந்தார். நான் அடி வாங்குவதற்குத் தயாராக மனதைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றேன்.