17
ஆள் காதிலே குண்டலம்......கழுத்திலே தாவடம், பட்டாடையில்லையேன்னு யோசனையா? நெஜமாகத்தான் அண்ணேன், அருமையான கவி இந்த தம்பி! இதோ; இந்த அண்ணன் சொல்லுது.
ஆட்கள்: வா தம்பீ! வா! ஊருக்கு ஒரு உபகாரம்! மடாதிபதிக்கு உபசாரம் செய்ய வேணும்! ஒரு கவி பாடு—வா!
(ஊர்ப் பொது மண்டபம். அருமறையானந்தர் ஆடம்பரமாக அமர்ந்திருக்கிறார்—மதிவாணன் பாடுகிறான்)
மதிவாணன் பாடல்
இராகம்: சாருகேஸி தாளம்: ஆதி
பல்லவி
சமரச நிலையருள் சந்நிதானம்
சந்ததமும் எம்மதமும் சம்மதமாகக் காணும்
(சம)
அ.பல்லவி
தாமரைமேல் தண்ணீர்த்துளி போல்
தாரணி வாழ்வினில் நேர்மைகொண்டார்
யாமெனும் அகங்காரம் காரியம் வென்றார்
அருமறை யானந்தப் பெயர் குலாவும்.
தெருள் மெஞ்ஞான குருபரன்
(சம)
(இசைத் திறமையுடன் மதிவாணன் பாடியது கேட்ட அருமறையானந்தர் பட்டாடையும் பரிசும் தந்து)
அருமறை: பரமன் உனக்கு அரிய ஞானத்தைத் தந்திருக்கிறார். அவன் புகழ் பாடு. திரு அருள் நாடு. உன் இசையால் அஞ்ஞான இருள் நிச்சயம் நீங்கும்.
(மதிவாணன்: தொடர்ந்து பாடுகிறான்.)
மதிவாணன் பாடல்
இராகம்: மாண்டு தாளம்: ஆதி
எங்கும்நிறை வானஜோதியே—இணையில்லா
இன்பரசமான சேதியே
இகபரம் இரண்டிலும்
(எங்)
செம்பொன்னணி நவமணியே
செல்வயமெனுந் திரு வுருவே
க்ஷேமநலம் யாவுமுந்தன் செயலாலே
அன்பர்சூழ் அருளகமாம் ஆதீனத்தரசே
ஆண்டகை நீயே, நானேயாகும்-துணைபுரிவாய்
(எங்)