பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

வாலி: தொல்லையாகி விட்டது உங்கள் போக்கு—இனி நான் வெளியே போய் விடுவேன்.

மதி: வேண்டாம்—உன் இஷ்டம் போல், மேலங்கியுடனேயே படுத்துக் கொள்—பிடிவாதக்காரன்!

[இருவரும் எதிர் எதிர் படுக்கையில் படுத்துக் கொள்கின்றனர். ஒருவர் அறியாமல் ஒருவர் பார்ப்பதும், தூங்குவது போலப் பாசாங்கு செய்வதுமாக உள்ளனர். வாலிபனின் போக்கு மதிவாணனுக்கு சந்தேகத்தை உண்டாக்குகிறது. வாலிபன் விசிறிக் கொள்கிறான் காற்றுக்காக. ஆனால் மேலங்கியைக் களைய மறுக்கிறான். வாலிபன் முகத்திலே வியர்வை அரும்புகிறது. விசித்திரன போக்காக இருக்கிறேதே என்று மதிவாணன் யோசிக்கிறான்]

வாலிபன்: (மெதுவான குரலில்) திருமணம் ஆகிவிட்டதா?

மதி: எனக்கா? இல்லை. இப்போது கிடையாது.

வாலிபன்: ஏன்?

மதி: என் தங்கை திலகா திருமணம் முதலில்! பிறகுதான் என் திருமணம்!

வாலிபன்: இதுவரையில் காதல்?

மதி: நேரமே கிடையாதடா தம்பீ.

வாலிபன்: (கேலியாக) கலைஞன் என்கிறீர்?

மதி: ஆமாம். காமுகன் என்றா அதற்குப் பொருள்?

வாலிபன்: (கேலியாக) அழகிகளைக் கண்டால் உமது மனதிலே அலைமோதுவதே கிடையாதா?

மதி: முழுநிலவு கண்டால் களிப்புதானே?

வாலிபன்: ஆமாம்!

மதி: ஆனால் நிலவைப் பிடித்து வந்து நமது கூடத்திலே விளக்காக்க வேண்டும் என்றா முயல்கிறோம்! அதே போன்ற மகிழ்ச்சிதான் எனக்கு, அழகு மங்கை-