பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மதி:

                                     அவன்
அருகில் நிற்கும் உரிமை கொண்டான்
          ஆனந்தம் பாராய் - கண்ணே
          ஆனந்தம் பாராய்.

இருவரும்:

காணும் காக்ஷியே காதல் ஆட்சிதான்.
காணும் காக்ஷியே காதல் ஆட்சிதான்.

(பேசிக்கொண்டே இருவரும் செல்கின்றனர்)

[குமாரதேவியின் தனி அறை. குமாரதேவி சாய் வாசனத்தில் வீற்றிருக்கிறாள்—தோழி செந்தாமரை குறும்பாகப் பார்த்துக் கொண்டே பேசுகிறாள்...]

செந்தாமரை: எப்படி தேவி இருக்கிறது ஊர்?

குமாரி: திருவிழாக் கோலமடி செந்தாமரை! எங்கும் அழகும் அன்பும் தாண்டவமாடுகிறது!

செந்தாமரை: ஆடாமல் என்ன?

குமாரி: கேலியா செந்தாமரை! மனதிலே மகிழ்ச்சி துள்ளி விளையாடும்போது, உலகம் உல்லாச கூடமாகத் தான் மாறிவிடுகிறது.

பணிப்பெண்: (அங்கு வந்து) அமைச்சரும்—படைத் தலைவரும்...

குமாரி: (ஆச்சரியமடைந்து)......வருகிறார்களா? இங்கா?

பணி: அனுமதி கோரி நிற்கிறார்கள்—அங்கு!

குமாரி: (முகம் மாறி) செந்தாமரை! புயல் கிளம்புகிறது!

[குமாரியின் தனி வறை—பணிப்பெண் வெளியேறுகிறாள்.

படைத்தலைவரும் அமைச்சரும் வருகிறார்கள். அமரும்படி சைகை காட்டுகிறாள் குமாரி. அமருகிறார்கள் அவர்கள். இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி...]

குமாரி: கவலையுடன் இருக்கக் காரணம்? படைத்