100 சொர்க்கவாசல் வெற்றி: சீமான் சபாபதிக்கா! ஏன்? பாஸ்கரப் பிரபு வுக்கு வாக்களித்தோமே? அமை: (மன்னனைக் குறிப்பாகப் பார்த்தபடி) சீமான் சபாபதி அருள்சீட்டு பெற்றிருக்கிறார். வெற்றி: மறந்து போனேன். பிரபுவைவிட அமை: இவர் பத்து மடங்கு அதிகம் செலுத்தியிருக் கிறார். [அருள்சீட்டைத் தர மன்னன் வாங்கிப் பார்த்து விட்டு] வெற்றி: சீமான் சபாபதிக்குத்தான் சந்தனக்காடு- சரி, ஆயுதச் சாலையில் களவு சம்பந்தமாக... அமை: துப்பு கிடைத்துவிட்டது. வெற்றி: குற்றவாளி யார்? அமை: (தயக்கத்துடன்) கைது செய்திருக்கிறேன். வெற்றி: யார்? அமை: குமாரசாமியார்.. (மன்னர் முகம் மாறுகிறது; அமைச்சர் விழியிலே குறும்பு தெரிகிறது.) வெற்றி:ஆதாரங்கள்? அமை: அப்பழுக்கில்லை. வெற்றி: அமைச்சரே! குமாரசாமியார் அமைச்சரை பரிதாபத்துடன் பார்க்கிறான்] அருள் சீட்டு பெற்றிருக்கிறார். அமை: தொகையின் அளவும் பெரிது. களவும் செய்து தான் இருக்கிறார். வெற்றி: குமார சாமியார் மட்டுந்தானா, இந்தக் கள விலே குற்றவாளி? அமை: வேறு. சிலரையும் காட்ட முடியும்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/100
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை