சொர்க்கவாசல் 111 மதி: அற்புதமாக இருக்கிறது, தம்பி! அற்புதமாக இருக் கிறது- ஆனால் அதோ, தாமரை பார்த்தாயா? வாலி: அதுமட்டுமென்ன அழகாக இல்லையோ! மதி: கண் படைத்தவன் எவனும் அப்படிக் கூறமாட் டான். ஆனால், மேலே நிலவு, கீழே குளத்தில் தாமரை. இருக்கலாமா? (இலேசாகச் சிரித்தபடி) நிலவு உதித்ததும் தாமரை குவிந்துவிடும் அல்லி மலரும். வாலி: (யோசித்தபடி) ஆமாம். மதி: கதிரவனைக் கண்டு கமலம் மலரும்-- நிலவைக் கண்டு அல்லி மலரும். வாலி: உண்மைதான். மதி: தாமரை மலர்ந்த நிலையில் இருக்கக் கூடாது. குவிந்து இருக்க வேண்டும். வாலி: மன்னிக்க வேண்டும். தாங்கள், கலை விழா வுக்கு வந்திருக்கிறீரா? இசைவாணரா? மதி: பாடத் தெரியும். வேழநாடு வாலி: ஓவியத்தை நானுந்தான் கூர்ந்து பார்த்தேன். இந்தக் குறை எனக்குத் தெரியவே இல்லை. மதி: ஓவியம் அழகாக இருப்பதால் குற்றம் சுலபத்தில் தெரியாது. ' இருவருமாக வேறு பல ஓவியக் காட்சிகளைக் காண்கிறார்கள். ஒவ்வொரு ஓவியத்தைப் பார்க் கும்போதும் மதிவாணன் மகிழ்கிறான், காட்சி யில் ஈடுபட்டு வாலிபனும் மகிழ்ச்சி அடைகி றான். என்றபோதிலும், மதிவாணனை கனிவுடன் அவ்வப்போது பார்த்து மகிழ்கிறான். ஒரு ஆட் வனின் ஓவியத்தை இருவரும் கூர்ந்து கவனிக்கி றார்கள். முகத்தில் கோபக் குறியில் இருக்கிறான் ஆடவன்.]
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை