114 சொர்க்கவாசல் வாலி: உன்னோடு விளையாடிக் கொண்டே இருந்து விட முடியாது. வேலை இருக்கிறது. நான் போயாக வேண் டும். மதி: போவதாவது--இதற்குள்? தம்பி! வா, விடுதிக்கு. என் வாலி: உன் விடுதிக்கா? இல்லை, இல்லை... நான் வரு வதற்கில்லை. [வாலிபனின் கரத்தைப் பிடித்து தன் கட்கத்தில் வைத்துக் கொண்டு) மதி: வாடா தம்பி! எனக்கென்னமோ, உன்னைக் கண் Lib... வாலி: (குறும்பாக) கண்டதும்... மதி: (சிரித்தபடி) ஒரு விதமான களிப்பு - விடுதிக்கு வா- விருந்து உனக்கு இன்று. வாலி: விடுதி வரையில் வேண்டுமானால் வருகிறேன். வேலை நிரம்ப இருக்கிறது. நான் பாடகனல்ல, உன்னைப் போல்; பாடுபட வேண்டியவன். மதி: (குறும்பாக) என்ன வேலை? எவளாவது மை விழியாளைச் சந்திக்கும் வேலையா? வாலி: (குறும்பாக) இருக்கலாம்! ஏன் கூடாதோ? மதி: ஏன் கூடாது? இளமை, அழகு, இனிமையான பேச்சு எல்லாம் திரண்டு உருண்டு இருக்கிறதே. வாலிபன் ஒரு கணம் வெட்கமடைந்து, கணம் சமாளித்துக் கொள்கிறான். மறு மதிவாண னுடன் தயக்கத்துடனேயே செல்கிறான்.) காட்சி- 61 இடம்: மதிவாணன் விழா விடுதி. இருப்: மதிவாணன், வாலிபன். நிலைமை: விடுதிக்கு முன்னால் வேழ நாட்டுக் கொடி நாட்டப்பட் டிருக்கிறது. "இன்ப நிலையம்'
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/114
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை