பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

சொர்க்கவாசல் மதி: சாப்பிடு! உம்... நெடு நேரமாகப் பேசிய களைப்பு உனக்கு. சாப்பிடு. வாலி: பசியில்லை! தொல்லையாகி விட்டதே. [மதிவாணன் ஒரு பழத்தை எடுத்து வாலிபன் வாயிலே திணிக்க முயல்கிறான்.) சரி சரி... நானே. சாப்பிடுகிறேன். [வாலிபன் பழம் சாப்பிட...] மதி: அடியாத மாடு படியாது என்பார்களே, சரியா கத்தான் இருக்கிறது. அதோ, அந்த மாதுளையை... வாலி: போதும். மதி: பலாச்சுளை? வாலி: மூன்று தின்றேனே! மதி: அண்டப் புளுகன்—நான் அந்தத் தட்டிலே வைத் ததே மூன்று. அப்படியே இருக்க (வாலிபன் மேற்கொண்டு தகராறு . செய்யாமல் சாப்பிட்டு, அவன் சாப்பிடுவதைக் கண்டு களித்த படி/] மதி: உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா? வாலி:ஏற்பாடாகி விட்டது. விரைவிலே நடைபெறும். மதி: பெண் எந்த நாடு...பால் சாப்பிடு... எந்த ஊர்? அழகியா? வாலி: (பால் சாப்பிட்டுவிட்டு) விவரம் நாளையதினம் கூறுகிறேன். இதோ பார், நேரமாகி விட்டது. மதி: தூக்கம் வருகிறதா இதற்குள்? வாலி: கோபம் வருகிறது பிரமாதமாக.

[கவலையுடன் உலவுகிறான் வாலிபன். அவன் நிலை கண்டு மதிவாணன் ஆச்சரியமடைகிறான். வாலிபன் மதிவாணனைக் கோபமாகப் பார்க்கி றான் ஒரு கணம் மதிவாணன் பாசத்துடன் பார்க் கக் கண்டு வாலிபனின் கோபம் தானாகத் தணி