124 சொர்க்கவாசல் மதி: விளக்கொளி வேண்டுமா? சொல்வதுதானே! அதற்குள் ஏன் முகத்தை முக்கோணமரக்கிக் கொள்கிறே? (படுக்கையில் சாய்ந்தபடி) தம்பி! குமாரதேவியாரைத் திரு மணம் செய்து கொள்ள எந்த மன்னரும் முயற்சி செய்யவில் லையா, இதுவரையில்? (வாலிபன் கோபமாகப் படுக்கையில் உட்கார்ந்து, சலிப்புடன்...] வாலி: அட, அடா! திருமணப் பேச்சுக்கு ஒரு அளவே கிடையாதா? 9 அரசர்கள், 16 சிற்றரசர்கள், 20 படைத் தலைவர்கள், குமாரதேவியாரைத் திருமணம் செய்து கொள் வதற்காகப் படை எடுத்து தோற்றுப் போனார்கள்- வரிசை யாக அவர்கள் பெயரைக் கூறவா, விடிகிற வரையில்... மதி: (கிரித்தபடி) சளித்து விட்டதா? [அங்குமிங்கும் பார்த்துக் கோபமாக எழுந்து, அங்கே கிடந்த ஒரு இசைக் கருவியை எடுத்து, மதிவா ணன் காதருகே கொண்டு போய், வாலிபன் வேக மாகவும், விடாமலும் வாசிக்க, மதிவாணன் சிரித்தபடி, வாலிபன் கரத்திலிருந்து இசைக் கரு வியைப் பறித்துக் கீழே வீச...] வாலி: எப்படி இருக்கிறது? இசைக் கருவிதானே! காது குடைகிறதல்லவா! அளவு அதிகம் அதனால்! அதே போலத்தான் இருக்கிறது உன் அன்புத் தொல்லை. மதி: கெட்டிக்காரனடா நீ! அளவு அதிகமானதால் காது குடையவில்லை. உனக்கு அனுபவமில்லை, இசைக் கருவியை வாசித்து . வாலி: (சிரித்தபடி) அதுவும் உண்மைதான். அனுபவம் ல்லை. இதுபோல். [வாலிபன் படுக்கையில் படுத்துக் கொள்ள, மதி வாணன். தாலாட்டு இசையை மெல்லிய குரலில் பாட, வாலிபன் சுண்களை மூடியபடி இரசிக்கிறான். மதிவாணன் விளக்கின் ஒளியை மீண்டும் குறைக் சிறான். வாலிபன் மீண்டும் திகைக்கிறான்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/124
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை