128 157 சொர்க்கவாசல் சில [மதிவாணன் மீண்டும் தன் படுக்கைக்குச் சென்று உட்கார்ந்தபடி வாலிபனைப் பார்க்க, அவன் புன்சிரிப்புடன் போர்வையை இழுத்து முகம் மறைகிற அளவுக்குப் போர்த்துக் கொள்கிறான். மதிவாணனும் படுத்துக் கொள்கிறான். விநாடிகள் இருவரும் பேசாமலிருக்கிறார்கள்.] [மதிவாணன் கண்களை மூடிக் கொண்டதைக் கண்ட பிறகு, வாலிபன், தன் மேலங்கியை சிறி தளவு தளர்த்திக் கொண்டு ஒரு புறம் சாய்ந்து படுக்கிறான்... வாலிபன் செயலை அவன் அறியாமல் கவனித்து வருகிறான் மதிவாணன். தலைப்பாகையை மெல்லக் களைந்துவிட்டு, சரேலெனப் போர் வையை இழுத்துப் போர்த்துக் கொள்கிறான், வாலிபன்.மதிவாணன் சரேலென எழுந்து விளக் கைப் பெரிதாக்குகிறான். வாலிபன் திடுக்கிட் டுத் திரும்பிப் பார்க்கிறான். காற்று வீசுகிறது. மேல் போர்வை விலகுகிறது. வாலியன் மீரட்சி யுடன் போர்வையை இழுத்துப் போர்த்துக் கொள்கிறான்.மதிவாணன் தன் படுக்கை அருகே செல்வது போல் பாவனை செய்கிறான்...] (ஆபத்து இல்லை இனி என்று சொல்வதுபோல வாலிபன் பெருமூச்செறிகிறான்.) [வேகமாகத் திரும்பி, போர்வையை இழுத்து விடு கிறான் மதிவாணன். மேலங்கி பாதி அளவு கலை யப்பட்டிருக்கிறது. பயமேலிட்டு பதைக்கிறாள், ஆண்வேடமிட்ட பெண். ஆச்சரியத்தால் அவ ளையே உற்றுப் பார்க்கிறான், மதிவாணன், கண்களை அகலத் திறந்தபடி. அவன் முகத்திலே புன்னகை. அவள் முகத்திலே அச்சம், வெட்கம் இப்படியா இருக்கிறது விஷயம்' என்று கேட்பது போலத் தலையை அசைக்கிறான் மதிவாணன். அரும்பு மீசையை எடுத்து எறிகிறாள் பெண்...) 1
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/128
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை