14 சொர்க்கவாசல் சேருகிறான். பாதையிலே நடைபெறும் கலகம் கண்டு குதிரையை விட்டு இறங்கி பணியாட்களில் இருவரின் பிடரியைப் பிடித்துக் குலுக்குகிறாள். மதிவாணன் ஒரு ஆளை நையப் புடைக்கிறான்-- திலகா கழி கொண்டு இன்னொருவனைத் தாக்கு கிறாள். மிரண்டு ஓடுகிறார்கள் ஆட்கள். அந் தக் காட்சியைக் கண்டு முத்துமாணிக்கம் சிரித்த படி...] முத்து: யார் இந்த முரடர்கள்? கள்ளர்களோ? திலகா (கூந்தலைச் சரிப்படுத்தியபடி, ஆட்கள் ஓடும் திக்கைப் பார்த்த வண்ணம்) இதுகள் கூலிகள். ஏவி விட்ட வன் மாளிகையிலே கிடக்கிறான். (கேலியாக) மகா... ராசா! மகுடமில்லாத மகாராஜா! முத்து: யார் அந்தப் புத்தியில்லாத பூபதி? திலகா: (கேவிக்குரலில்) சோமநாதரு... [முத்துவின் முகம் மாறுகிறது.) மதி: ஊர்த்தலைவர் சோமநாதரின் அடி ஆட்கள் இவர்கள். அவருடைய மகன் வருகிறானாம் இன்று.வர வேற்பாம்! திலகா : (பேச்சைத் தொடர்ந்து) எங்க தோட்டத்து மலர் முழுவதும் கொடுத்தாக வேணுமாம். மதி: மலர் தரத்தான் சென்று கொண்டிருந்தேன். திலகா: ஆமாம், இந்த தவசியின் சுபாவமே இதுதான். மதி: திலகா! ஆத்திரமாகப் பேசாதே! திலகா முதலில் மலர் தரமுடியாதென்று சொன்னதால், சோமநாதர் ஆத்திர மடைந்து அடி ஆட்களை ஏவினார், தோட்டத்தை நாசம் செய்யச் சொல்லி. திலகா எப்படி இருக்கு நியாயம்? பணம் இருக்கு நிறைய என்கிற ஆணவம். பேசிக் கொண்டே மூவரும் மதிவாணன் வீடு நோக்கிச் செல்லுகிறார்கள்..]
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/14
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை