பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 145 காட்சி--71 இடம்: அமைச்சர் கூடம் இருப்: படைத்தலைவர், அமைச்சர், குமார தேவி. நிலைமை: அமைச்சர் கவலையுடன் உட் கார்ந்து கொண்டிருக்கிறார். படைத்தலைவரைக் கண்டதும். அமைச்சர் தமது எதிரே கிடந்த பல ஓவியங்களை அலட்சியமா. கத் தள்ளி வைத்துவிட்டு, படைத் தலைவரை அமரும் படி ஜாடை காட்டுகிறார். உட்காரு முன்பே பேசத் தொடங்குகிறார் படைத்தலை வர். படைத்தலைவர்: திருமணமே வேண்டாம். நான் கன்னி யாகவே இருந்துவிடத் தீர்மானித்து விட்டேன், நாட்டின் நன்மைக்காக என்று பேசினதெல்லாம் வெறும் பசப்பு. அமை: அவந்தி நாட்டரசனைக் கலியாணம் செய்து கொள்ளலாமே என்று கூறுவேன் நான். உடனே பயப்படு வது போலாகி, அமைச்சரே. அவந்தி நாட்டரசனுக்கும் அயோத்திக் கோமகனுக்கும் தீராப்பகை இருக்கிறதே. நான் அவந்தி மன்னனை திருமணம் செய்து கொண்டால், அயோத்தி அரசன் நமது நாட்டின்மீது போர்தொடுப்பானே! நாட்டுக்கு ஆபத்து ஏற்படுமே? என்று கூறி வாயை அடைத் தாகி விட்டது முன்பு. ப.த : ஒரு முறையா, இரு முறையா அமைச்சரே! ஒவ்வொரு முறையும்தான் தோல்வி. அமை: நாம்தான் மடத்தனமாக அரசியின் பசப்பு மொழிகளை நம்பித் தொலைத்தோம். ஏமாற்றப்பட்டோம். தந்திரத்தால் இருவரையும் ஏமாற்றிவிட்டார் அரசியார்.