154 சொர்க்கவாசல் அமை: நாடோடி வேந்தே அவன். அதை அறியாத வனா நான். நான் கூறுவது வேறு. வெற்றி: என்ன அந்த வேறு வேறு! அமை: இப்போது அவனைத் தண்டித்தால் இழிவாக ஏளனமாகப் பேசுவர், விவரமறியாத பாமர மக்கள். நமது மண்டலத்தில் மட்டுமல்ல, பல நாடுகளிலும், பாடகனாம் ஒருவன், பட்டத்தரசி அவனைக் காதலித்தாளாம்! போறாமை கொண்ட வேந்தன் பாடகனைப் படுகொலை செய்து விட்டாராம் என்று பரிகாசமாகப் பேசுவர். வெற்றி: உண்மைதான். பெரிய தியாகி ஆகிவிடுவான். அமை: மேலும், தங்கள் காதல் திட்டத்தை, பாடிடும் பராரி ஒருவன் தகர்த்து விட்டான் என்று வெளியே தெரிவது நல்லதா? வெற்றி: கேலி பேசுவர் பலரும் -- இலவு காத்த கிளி என்பார்கள். அமை: அதனால்தான் வேந்தே,கூறுகிறேன். துரோகி யைத் தண்டிக்க இது சமயம் அல்ல. இந்தக் காரணத்தைக் காட்டித் தண்டிப்பதும் அழகாக இராது. அலட்சியமாக இருந்து விடும் அரசே! ஆதரவுகூடத் தருவதாகக் கூறும் அசடன்தானே! பூரித்துப் போவான். பொன்னான சமயம் வருகிறபோது. துரோகியைத் தொலைத்து விடலாம். ('அதுதான் சரி' என்று முடிவுக்கு வந்தவனாகி வெற்றிவேலன் தலையை அசைக்கிறான்.) காட்சி--74 இடம்: சோலைநாட்டில், காட்டாற்றின் ஓரம். இருப்: மதிவாணன், குமாரதேவி. நிலைமை: அரசி மதிவாணனுடன் கல் லணை கட்டப்பட்டு இருக்கும் காட்டாற்றின் பக்கம் சென்று கொண்டிருக்கிறாள்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/154
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை