பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 157 முத்து: உயிர் கொடுத்த உத்தமர்களே! இதுபற்றி இனிப் பேசவேண்டாம். மனம் பதறி நான் ஏதாகிலும் பேசி விடுவேன். நன்றி கெட்டவன் என்று சொல்வீர்கள் பிறகு. வேண்டாம் என்னை வேதனைக்கு ஆளாக்க வேண்டாம். மருத்: உன் இஷ்டம்போலச் செய் முத்து [மருத்துவர் நண்பரைப் பார்த்துவிட்டு வெளியே செல்கிறார்.] முத்து: (உருக்கமாக) திலகாவை நான் இழந்து விடு வதுதான், திலகாவுக்கு நான்' செய்யக் கூடிய உதவி.என் கர்தல் உத்தமமானது என்றால், அதுதான் செய்ய வேண் டும் நான். இதயத்தைத் தொட்டுக் காட்டியபடி... திலகர எப்போதும் இங்கு இருப்பாள். . [முத்துமாணிக்கத்தை நண்பர் அன்புடன் பார்க்கி றார். முத்துமாணிக்கம் கண்ணில் தோன்றிய திவலையைத் துடைத்தபடி உருக்கமாக...] எப்போதும் இங்கு இருப்பாள்- திலகா என் இதய வீணை அவள். நண் : சித்திர நடை போதும்-இன்று திலகா! இங்கு. வருகிறாள் முத்து: (பயந்து) திலகாவா! இங்கா?... ஐயோ! ஏன்? நண்: (கேலியாக) ஏன்? என்ன கேள்வி கேட்கிறாய் முத்து? முத்து: (பதறி) அவள் இங்கு வரக் கூடாதே! நான் அவளைப் பார்க்க மாட்டேன். முடியவே முடியாது. நான் எங்காவது ஓடிவிடுகிறேன். உயிரை மாய்த்துக் கொள்கிறேன். நண்பர்: (அவனைத் தட்டியபடி) பைத்தியக்காரா! பதறாதே! திலகாவின் காதலைத் துச்சமாக எண்ணாதே! (மருத்துவர் வருகிறார்.) மருத்: திலகா! தோட்டத்தில்...