162 சொர்க்கவாசல் னைப்படுகிறான். பேசாமல் செல்கிறான், தன்னை மறந்து.திலகா ஓடிவந்து முத்துமாணிக்கத்தின் கரத்தைப் பிடித்து...) இதென்ன கள்ளன்போல... (என்று கேட்டுக் கொண்டே திலகா, முத்து கண் ணீர் வடித்தபடி இருக்கக் கண்டு கலங்கி... கண்ணாளா! என்ன இது? முத்து: (சமாளித்தபடி) ஒன்றுமில்லை திலகா! நம் திருமணத்தைக் காண அப்பா இல்லையே என்ற விசாரம். திலகா: கண்ணாளா! எதையோ மறைக்கிறீர். முத்து: (புன்னகையை வருவித்துக் கொண்டு) ஒன்று மில்லை, திலகா! இன்னும் பத்து நாளில் வந்து சேருகிறேன். புறப்படு கண்ணே! நேரமாகிறது. துணைக்கு யார்? திலகா : தும்பை வந்திருக்கிறாள் அங்கே. ச முத்து: இங்கே எனக்கு ஒரு அவசரமான அலுவல்! திலகா : பத்து நாட்களில்... முத்து: ஆமாம் திவகா! [போய் வரவா' என்று ஜாடையாகக் கேட்கிறாள். அவளுடைய கரங்களை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டு உருக்கமாக...] முத்து: போய் வா, திலகா! திலகா செல்கிறாள். அவள் செல்லும் திக்கை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே நிற்கிறான் முத்து, சில கணம். பிறகு தள்ளாடி நடந்து செல் கிறான். அவன் செவியில்...) குருடு, முடம், நொண்டி, ஊமை இதுகளுக்கெல்லாம் கல் யாணம் வேறு, கல்யாணம்!- (என்று திலகா கூறிய சொற்கள் செவியில் விழுந்த வண்ணம் இருக்கின்றன. நண்பன் வருகிறான் எதிரே.j
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/162
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை