சொர்க்கவாசல் . 177 மதி: என் சபதம் நிறைவேறிவிட்டது. ஓலை அனுப்பு கிறேன், திருமண நாள் குறித்து! இதோ-- இப்போதே! (திலகா வெட்கப்பட்டு உள்ளே ஓடிவிடுகிறாள். மதி வாணன் மகிழ்ச்சியுடன் ஓலை. தயாரிக்கிறான்.] காட்சி-89 இடம்: வெற்றிவேவன் அரண்மனை--ஓர் கூடம். இருப்: வெற்றிவேலன், ஒற்றன். (வெற்றிவேலன் ஒற்றனிடம் பேசுகிறான்] வெற்றி: நம்ப முடியவில்லையே! இந்தப் பராரிக்காகப் பட்டத்தைவிடச் சம்மதிக்கிறாளா? ஹூம்! எவ்வளவு பைத் தியக்காரத்தனம்! ஒற்றன்: பலர் இதுபோலத்தான் வேந்தே கேலி பேசு கிறார்கள் குமாரதேவி எதையும் பொருட்படுத்தவில்லை. வெற்றி: பிடிவாதக்காரி ... அதோ அவன்தான்! சரி. நீ போகலாம்! (மதிவாணன் மகிழ்ச்சியுடன் அங்கே வர...) வா, மதிவாணா! கேள்விப்பட்டேன் - களித்தேன்--உன் காதலின் சக்தியே சக்தி...! மதி: வேந்தே! குமாரதேவியின் தியாகம் மகத்தானது; நான் துளியும் எதிர்பார்க்கவில்லை! என் பொருட்டு ஒரு பெரும் அரசை இழக்க மனம் வருவதென்றால் ஆச்சரியம் தான் ...! வெற்றி: ஆம், ஆம்! இசை அரசனல்லவா நீ - பிறகு பேசுவோம் - ஒரு அவசரமான வேலை. மதி: வணக்கம். [மதிவாணன் வணக்கம் கூறிவிட்டுச் செல்ல] வெற்றி: மடையன்! நான் வேறு புகழவேண்டுமென்று எதிர்பார்க்கிறான்! மண்டைக் கர்வியாகி விடுவான். மட்டந் தட்டியாக வேண்டுமே!..(யோசித்தபடி)எப்படியாவது மட்டந்தட்டியாக வேண்டும். குமாரியும் இவனும் இங்குக்
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/177
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை