பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 179 டாளல்ல, ஊர் பேரில்லாத் திலகாவைத் திருமணம் செய்து கொள்ள! (தும்பை கோபம் கொள்கிறாள்) ஆடிப்பாடிப் பேசினாள்; நானும் மகிழ்ச்சிக்காக விளையாடினேன். கலியாணமே செய்து கொள்வ தாமே--ஊம் (கேலியாக) பெரிய பிரபு குடும்பமல்லவா? பாடிப் பிழைக்கும் பராரிக்கு எவ்வளவு பேராசை! போ...போ... போய்ச் சொல்லு உன் திலகாவிடம்! அவனிடமும் சொல்லு. திருமணம் என்ற எண் ணத்தை மறந்துவிடச் சொல்லு. என் அந்தஸ்து என்ன? குலம் என்ன? குடும்ப கௌரவம் என்ன? எப்படி அடுக்கும் இந்த சம்பந்தம் என்று கேள்? போ : ஓலையை எடுத்துச் செல்! கொண்டு போய் அவன் முகத்தில் வீசு! திலகாவைத் திருமணம் செய்துகொள்வதாம்!. ஹும்! பைத்யக்காரன்! நான் செய்து கொள்வதாம்!...நான்! [தும்பை.கண்களைத் துடைத்தபடி வேகமாகச் செல் கிறாள்.. அவள் சென்றதும், முத்துவின் வேதனை மீண்டும் தோன்றுகிறது. பதறுகிறான். கீழே எறிந்த ஓலையைப் பாய்ந்து சென்று எடுத்துக் கொண்டு பாசத்தோடு மார்பருகே வைத்துப்" பதறியபடி...] முத்து: திலகா! திலகா! நான் என்ன செய்வேன்? ஐயோ! எவ்வளவு கொடுமை!எப்படித் தாங்குவாய் கண்ணே, எப்படித் தாங்குவாய்? [தள்ளாடிச் சென்று பலகணி வழியாகப் பார்க்கி” றான். எங்கும் வெட்டவெளியாகத் தெரிகிறது. அவன் கண்களுக்கு] காட்சி-91 இடம்: சோழநாட்டில் மதிவாணன் மாளிகை- ஓர்கூடம். இருப்: திலகவதி, தும்பை. [திலகாவின் தனி அறையில் தோழி தும்பையும் திலகாவும் பேசுதல். திலகா கண்ணீர் சிந்திய படி...)