பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சொர்க்கவாசல் [மக்களை விரட்டியபடி படைவீரர்கள் சிலர் வருகின் றார்கள். வீட்டினுள்ளே அவர்கள் நுழைவதை திலகா தடுத்து திலகா : நில்லுங்கள்! உள்ளே என்ன வேலை? படை: அவனுக்கு... இவ தங்கச்சி. திலகா : இவ... {அக்ரமம்! என்ன துடுக்குத்தனமான பேச்சு? திலகாவின் கழுத்தைச் சுற்றிவிட்டபடி, இன்னொரு படை: படைவீரன்...] ச்சீ... வாயாடி!

அண்ணன் ஆஸ்தான வித் வானாச்சே என்ற கர்வமா? அது மலை ஏறிப்போச்சு! கற்: அப்பா, அப்பா! அவ சிறுபெண். கோபிக்காதே. (கற்பகத்தம்மை பதறிச்சென்று திலகாவின் வாயை மூட திலகா அதைத் தள்ளி...] திலகா: விடம்மா — என்ன தலையா போய்விடும்? அண் ணனையே நாடு கடத்திவிட்டார்களாம் - இந்த நாட்டிலே நியாயமா கிடைக்கும்? (இதற்குள் சில படை வீரர்கள் உள்ளே நுழைய) பாரம்மா, பாரம்மா! உள்ளே போவதை? ஏ- சிப்பாய்..ஏ வேறு சில படை வீரர்கள் திலகாவின் கரத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்] கற்: (கதறும் முறையில்) அப்பா-- இது என்னப்பா -- ஏனப்பா இம்சை? படை: அட, பாரம்மா, விவரம் தெரியாமே பேசறே! இந்த வீட்டைப் பறு முதல் செய்யும்படி உத்தரவு! இன்னொரு படை : உங்க இரண்டு பேரையும் அர சாங்க, விடுதிக்கு அழைத்துவரச் சொல்லியும் உத்தரவு இருக்கு! திலகா: சிறையா எங்களுக்கு?