பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1198 சொர்க்கவாசல் [மதிவாணன் தாக்கப்படுகின்றான். ஆவேசமடைந் தவன்டோல், ஒரு படைவீரனின் ஆயுதத்தைப் பறித்துக்கொண்டு மிரட்டுகிறான். பலர் கூடி, ஆயுதத்தைப் பறித்துக் கொண்டு பலமாகத் தாக்கிவிடுகிறார்கள் மதிவாணனை. ஒரு பக்க மாக கவிராயரைப் பிடித்து இழுத்துச்செல்கிறார் கள். மற்றோர் புறமாக மதிவாணனை இழுத்துச் செல்கிறார்கள்.] கவி: கலங்காதே மதிவாணா! கலங்காதே! மதி : ஐயனே! கொடுமைக்கு ஆளான மெய்யனே! . கவி: மகனே, அஞ்சாதே! அஞ்சாதே துளியும்! வெற்றி நமதே! அஞ்சாதே. மதி: அறிவு அளித்தோனே! அண்ணலே கவி: மதிவாணா? நிமிர்ந்து நில்! ஏறு நடைபோடு! வெற்றி -- வெற்றி (மயக்கமுற்றுக் கீழே சாய்கிறார் கவிராயர்] ஒரு படை வீரன்: வாயாடிக் கிழவன் தொலைந்தான். காட்சி-1OI இடம்: ஊருக்கு வெளியே ஓர் இடம். இருப் பூங்காவனம், மதிவாணன். பூங்காவனம்: மதிவாணரே! மதிவாணரே! செத்துத் மதி: (கண் திறந்து பார்த்து, களைப்புடன்) ஐயா, தான் எங்கே இருக்கிறேன்? என்னைக் காப்பாற்றிய நீங் கள் யார்? பூங்கா: வேழநாட்டில் இல்லை, மதிவாணரே! ஆஸ் தான கவியாக எந்த வேழநாட்டில் கொலு வீற்றிருந்தீரோ, அந்த வேழ் நாடு அல்ல இது...இது ஏழைகள் நாடு அடுத்து இருப்பது காடு