பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 199 மதி: சரியான தண்டனை எனக்கு, கவிராயர் கதி என்ன ஆயிற்றோ? ஐயா, உம் பெயர் என்ன? யார் நீங்கள்? பூங்கா: என் பெயர் பூங்காவனம். மதி: பூங்காவனமா? எங்கேயோ, எப்போதோ கேள் விப்பட்ட பெயராக இருக்கிறதே. பூங்கா: சதிகாரன் என்று சபா மண்டபத்திலே பேசி இருப்பார்கள். மக்களை மன்னனுக்கு எதிராகத் தூண்டிவிடு பவன்-ராஜத்துரோகி என ஏசியிருப்பார்கள். கொலுமண்ட பத்தில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்னை, வேழ நாட்டு வெறியர்கள். கவிராயருக்கு நான் நண்பன். மதி: (அவன் கரத்தைக் கண்களில் ஒத்திக் கொண்டு) கவிராயர் நண்பரா? அவர் கதி என்ன அய்யா? பூங்கா: எவ்வளவு முயற்சித்தும் காப்பாற்ற முடிய வில்லை. மதி: பாவிகள் அவரைப் பலமாகத் தாக்கிவிட்டார் கள்! எனக்கு ஆதரலளித்த அண்ணலைக் காப்பாற்றும் ஆற் றல் இல்லையே எனக்கு! முயற்சித்தேன் நானும். முடிய வில்லை. பூங்கா : மதிவாணரே! களைப்பு நீங்கியதும் பேசலாம். (வேறோர் இடம், மதிவாணரும் பூங்காவனமும், வேறு சிலரும் உள்ளனர்.] பூங்காவனம்: மதிவாணரே, அறப்போர் தொடுக்க அருமையான சமயம். போங்கள் ஊருக்குள்ளே: விழாப்

பந்தலுக்கு வேண்டாம். வருவார்கள் உம்முடன். வேறோர் பக்கம். இவர்கள் சென்று எது உண்மையான சொர்க்கவாசல் என்பதைப் பாடுங்கள். மக்கள் கேட்கட்டும். மதி: சரி, பூங்காவனம். (போகின்றனர்.] [சொர்க்கவாசல் விழா. அருமறையானந்தர் அலங் கரிக்கப்பட்ட உயரிய ஆசனத்தில் அலங்காரஆடை