பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 209 மற்றோர் கைதி: ஆசாமிகளைப் பார்த்தா அப்படித் தெரியலையே! (உள்ளே வந்து தடை மீறுபவனைப் பார்த்து) கொள்ளையா? கொலையா? (புன்சிரிப்புடன்) அதெல்லாம் மலைவாசி யப்பா - பாட்டுப் பாடினேன். ஒரு கைதி : (திடுக்கிட்டு) பாட்டுப் பாடினா? இல்லை மலை: பாடாதேன்னு அரசாங்கம் தடை போட்டது. மற்றோர் கைதி: பாடக் கூடாதுன்னா தடை? 1 மலைவாசி: எல்லாப் பாட்டுக்கும் தடையில்லை - மதி வாணர் பாட்டுக்கு மட்டும் தடை- ஒரு கைதி: அது என்ன பாட்டு தம்பி! ராஜாங்கத் துக்குப் பிடிக்காத பாட்டு.. ம. கைதி: களவு எப்படிச் செய்யுறது-- கொலை எப்ப டிச் செய்யறதுன்னு புதுப்புது வழி சொல்லிக் கொடுக்கிற பாட்டுப் போல இருக்கு மலை: அதெல்லாம் இல்லையப்பா - ஜாதி கூடாது-- பேதம் கூடாது. கடவுள் பேரைச்சொல்லி ஏழைகளை ஏமாற் றக் கூடாது. இப்படிப்பட்ட விஷயமிருக்கு, அந்தப் பாட் டிலே. ஒரு கைதி : நல்ல விஷயம்தானே? ம. கைதி : இது பாடக்கூடாதுன்னா தடை? மலை: ஆமாம். ஒருகைதி: நல்ல ராஜாங்கமா இருக்கே." ம.கைதி : தம்பி ! அந்தப் பாட்டைப் பாடு கேட்கலாம்! மலை: தடையை மீறிப் பாடினா இங்கேயும் தண்டிப் பாங்களே. ம்.கைதி கொலை- கொள்ளை போல அக்ரமம் செய்து தண்டனை அனுபவிக்கிறதைவிட, இந்தத் தம்பி மாதிரி

B

==