சொர்க்கவாசல் 217 வெற்றி: ஆமாம். குமாரியை மீட்டாக வேண்டும். வெட்கப்படட்டும் குமாரி. எந்த வெற்றிவேலனை அவள் அலட்சியப்படுத்தினாளோ அவனுடைய வாள் பலத்தால் தான் காப்பாற்றப்பட்டாள் என்ற சொல் போதும், அவள் வாழ்வைச் சுட்டெரிக்க. [படை வீரர்கள் செல்கிறார்கள்.] காட்சி--108 இடம்: கோட்டையின் மேல்தளம். இருப்: குமாரதேவி, வெற்றிவேலன். (நடு நாட்டரசன் படை பிளக்கப்படுவதைக் காண் கிறான், குமாரியின் ஒற்றன். தளபதி ஒருவன் குமாரதேவியிடம் சேதி கூறுகிறான். குமாரி, களிப்படைகிறாள்... வேறோர் ஒற்றன் விறைக்க விறைக்க ஓடி வருகிறான்...] ஒற்றன்: நடுநாட்டரசன் படைகளை, வெற்றிவேலன் படைகள் பிளந்துவிட்டன! கடும்போர்! நடுநாட்டரசனின் படை வரிசை குலைந்து விட்டது. குமாரி: (பூரிப்புடன்) இதுதான் தக்க சமயம். தாக்க (குழல் ஊதப்படுகிறது. குமாரி தன் ராணுவ உடை யைச் சரிப்படுத்திக்கொண்டு குதிரை மீது ஏறு கிறாள். படைகள் கிளம்பும் ஒலி கேட்கிறது...] (கோட்டையின் முன்புறம் குமாரியும் காப்பாளரும் நிற்கிறார்கள். எதிர்ப்புறத்திலிருந்து வெற்றிவேல் 'னும் துணைவர்கள் நால்வரும் வருகிறார்கள். வெற்றிவேலனின் கோலம், அவன் களத்திலிருந்து வகுகிறான் என்பதைக் காட்டுகிறது. அருகே வந்ததும், குமாரி, தழதழத்த குரலில் ...] குமாரி: இந்தப் பேருதவியை என்றும் மறக்க முடி யாது. என் நாடு அடிமைச் சாவடியாகியிருக்கும், தங்கள் உதவி கிடைத்திராவிட்டால்...
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/217
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை